பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இதிகாச
இலக்கியம்


பாரதம் என்றால் பாரதர்களுக்குள் உண்டான போரின் பெருங்கதை என்று பொருள் இந்தப் பாரதர்கள் யுத்தப் பிரியர்களான ஒரு வகுப்பினரென்று ரிக் வேதத்திலேயே குறிப்பிடப்படுகின்றார்கள் பிராமணங்களில் பரதன் தந்தையான துஷ்யந்தனும், அவன் மனைவி சகுந்தலையும் குறிப்பிடப் பெறுகின்றனர் கங்கை, யமுனை என்னும் ஆறுகளில் மேல்கரையிலுள்ள நாடு பாரதர்களுடையது பாரதர்கள் மரபில் தோன்றியவர்களில் குரு மிகவும் பேர்பெற்றவர் அவர் மரபினர் குருக்கள் அல்லது கெளரவர்கள் எனப்பெறுவர். அம் மரபினரே பாண்டவர்களும் கெளரவருக்கும் பாண்டவர்களுக்கும் உண்டான குடும்பப் பகையே பாரதப்போருக்குக் காரணமாகின்றது அது நடந்த குருக்ஷேத்திரம் என்ற இடப்பெயர் யஜுர் வேதத்திலும் பிராமணங்களிலும் வருகிறது

உண்மையான வரலாற்று நிகழ்ச்சியில் இடங்கொண்ட இச்சண்டையையும், அதில் செயல் புரிந்த படைவீரர்களையும், வருணித்துப் பலர் பலவிதமான சிற்றிலக்கியங்களை இயற்றி இருக்கலாம் ஆங்காங்குச் சிதறிக்கிடந்த மறைப்பகுதிகளை வியாச முனிவர் எடுத்து, அவற்றை இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்று நான்காக வகுத்து அமைத்ததுபோல், இச்சிற்றிலக்கியங்-