பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

செந்தமிழ் பெட்டகம்

களையும் ஒன்றுதிரட்டி, அவற்றையே மூலக் கருவி களாகக்கொண்டு மகாபாரதம் என்ற பேரிலக்கியத்தை ஆக்கியிருக்க வேண்டும்

மகா பாரதம் :

வியாச முனிவர் எழுதிய மகா பாரதம் என்னும் இதிகாசத்தை இந்துக்கள் எல்லோரும் ஐந்தாம் வேதமாகக் கருதுகிறார்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப்பொருள்களைப் பற்றி இந்நூல் கூறும் கருத்துகளைத் தவிர வேறு கருத்துகள் மற்றெங்கும் கிடையா என்று இந்த நூலே கூறுகின்றது மனுநூலில் பத்தில் ஒரு பாகம் பாரதத்தில் காணப்படுகின்றது

பாரத காலத்தில் நான்கு வருணத்தாருடைய தொழில்களும் நன்றாக வரையறுக்கப்பட்டிருந்தன இருபிறப்பாளர் காலையில் நீராடி மந்திரங்களால் சூரியனையும் ஆகுதிகளால் அக்கினியையும் வணங்கி வந்தார்கள் உருவ வழிபாடிருந்ததாகத் தெரியவில்லை கோயில்களும் சிலைகளும் சில இடங்களில் கூறப்பட்டிருப்பது இடைச்செருகல் என்று கருதப்படுகிறது

இலக்கிய வர்க்கத்தில் பாரதம் இதிகாசம் எனப் பெறும் அறம், பொருள், இன்பம், வீடு என்றுள்ள நான்கைப்பற்றிய உபதேசங்களை உடையதும், பழைய மன்னர் குலக் கதையைக் கூறுவனவதுமான நூல் இதிகாசம் எனப்படும் இத்தகைய இலக்கியச் சிற்பத்தின் நுட்பத்தை அறியாமல், மேனாட்டு இலக்கியச் சோதகர்கள் தவறான பற்பல கற்பனைகளைக் கூறுகின்றார்கள் ஜோசப் டால்மன், சில்வான் லெவி இவர்கள் போன்ற இரண்டொருவர்கள் மட்டும் மகாபாரதம் இப்பொழுது காணப்படுகின்ற ரீதியிலேயே ஒரே கவியால் ஒரே காலத்தில் ஆக்கப்பட்ட பிரபந்தம் என்று வற்புறுத்தியிருக்கின்றார்கள்

மகாபாரதப் போர் நடைபெற்ற காலத்தைப் பற்றியும் பல அறிஞர்கள் பலவிதமாகப் பேசுகிறார்கள்