பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

செந்தமிழ் பெட்டகம்

பிறகு, பாண்டவர்களின் செல்வப் பெருக்கைப் பொறாத துரியோதனன் சகுனியின் உதவியால் யுதிஷ்டிரரை இருமுறைகள் கவறாடலில் தோல்வியுறச் செய்து, அதன் பயனாகத் தம்பியருடனும் பாண்டவர்கள் ஐவருக்கும் மனைவியான திரெளதியுடனும் அவரைக் காடேறச் செய்து, அங்கு அவர்கள் 12 ஆண்டுகள் இருந்துவிட்டுப் பின்னும் ஓராண்டு கரந்துறைந்து, இட்ட நிபந்தனையைப் பூர்த்திசெய்து, அரசைத் திரும்பத் தரும்படி கிருஷ்ணனையே திருதராஷ்டிரனிடம் தூதனுப்பிக் கேட்டும், “ஊசி குத்தும் இடங்கூடத் தரமாட்டேன்” என்று துரியோதனன் மறுக்கவே, தொடக்கத்திலேயே குறிப்பிடப்பட்ட பாரதப் போர் மூளலாயிற்று

பாண்டவர் பக்கத்தில் திரெளபதியின் தமயனான திருஷ்டத்துய்மன் படைத்தலைவனாகிப் பாஞ்சால தேசத்தரசனான தன் தந்தை துருபத மன்னனுட்னும் அருச்சுனன் மகன் அபிமன்யுவுடனும் அவன் மாமன் விராடனுடனும் பல போர்வீரர்களுடனும் கூடிப் போரை நடத்தினார் துரியோதனன் பக்கலிலோ முதல் பத்து நாட்கள் பீஷ்மரும், அடுத்து ஐந்து பகல்கள் துரோணாச்சாரியரும், அதற்குப்பின் இரண்டு நாட்கள் கன்னனும், கடைசியாகச் சல்லியனும் படைத் தலைவர்களாக இருந்து மாண்டனர்

18 ஆம் நாள் பிற்பகலில் நடந்த கதை யுத்தத்தில் பீமனால் தொடையில் அடிபட்டுத் துரியோதனன் விழுந்தான் அவனுக்கு முன்னரே அவனுடைய 99 சகோதரங்களும் பீமன் கைப்பட்டே உயிரிழந்து போயினர் பாண்டவர்கள் பக்கலில் உயிரிழவாமலிருந்த திருஷ்டத்துய்மனையும், திரெளபதியின் பிள்ளைகள் முதலிய பாஞ்சாலர்கள் அனைவரையும், உறங்கிக் கொண்டிருக்கும்போது அசுவத்தாமன் படுகொலை செய்தான் ஆகவே பாண்டவர்கள் ஐவரும், கிருஷ்ணன், சாத்தகி இவ்விருவர்களும் ஆக 7 பேர்களே 7