பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

செந்தமிழ் பெட்டகம்

கழறினான் பீமா, உங்களையும் திரெளபதியையும் யுதிஷ்டிரர் வைத்தாடியது செல்லாதென்று நீ சொல்லி விடு; போதும் எல்லோரும் அடிமைத்தனத்திலிருந்து நீங்கிவிடலாம்’ என்று துரியோதனன் கேட்டபோதோ, அவ்விதம் நினைக்கின்றவன் பீமனல்லன் எங்கள் உடல், பொருள், ஆவி, இம்மூன்றுக்குந் தலைவர் எம் தமயனார்’ என மொழிந்தான் பீமனைப் போல் திரெளபதியும் இதேமுறையில் யுதிஷ்டிரரைக்கடிந்து பேசிப் பிரேமை பாராட்டுவாள்

பொதுவாகப் பாண்டவர்களிடத்திலும், சிறப்பாக அருச்சுனனிடத்திலும் கிருஷ்ணர் காட்டிய தோழமைக்கும், அவ்விதமே துரியோதனனும் கன்னனும் ஒருவர் பால் ஒருவர் கொண்டிருந்த நட்புக்கும் இராம சுக்கிரீவர் நட்பு இணையாக மாட்டாது

ஒர் அந்தணன் மகனுக்குப் பதிலாக, பீமனைப் பகாசுரன் என்ற பயங்கர அரக்கனிடம் போகவிடுத்த வீரத்தாய் குந்தி, உலகப் பழிக்கு அஞ்சி ஸ்ரீராமர் சீதையைக் காட்டிலே விட்டதுபோல், கன்னனைப் பெற்றதும் ஆற்றிலே விட்டாள் கன்னன் பிறப்பைக் குத்தி ஒளித்து வந்தது இடைவிடாமல் அவள் உள்ளத்தை உறுத்தி வந்ததுடன், பாரதப்போர் மூளுவதற்கும் ஏதுவாயிற்று கன்னன் ஒருவனையே முக்கிய பலமாகக் கொண்டன்றோ துரியோதனன் பாண்டவர்களுக்கு அரசு தர மறுத்தான்? யுதிஷ்டிரர் முடிசூடும் வரையில் நல்குரலில் மூழ்கியிருந்த குந்தி அவருக்குச் செல்வம் வந்தவுடன் அதில் பங்கு கொள்ளாமல் தன் ஒரகத்தியுடனும் மைத்துனருடனும் காட்டிற்கே சென்று அங்குள்ள துன்பங்களை ஏற்றுக் காலமானாள்

கணவன் கண்ணிழந்தவன் என்பதை எண்ணித் தானும் ஆடையால் தன் இரு கண்களையும் மறைத்துக் கொண்டிருந்த மகாபதிவிரதை காந்தாரி ‘அம்மா, போருக்குச் செல்லுகிறேன் ஆசிகூறு’ என்று துரியோதனன் அவளிடம் மிகப் பணிவுடன் வேண்டிய போது, ‘எங்கு அறமுளதோ அங்குத்தான் வெற்றி' என்றாள்