பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

133


போரின் காரணமாகத் தான் பெற்ற நூறு பிள்ளைகளும் நீறுபட்டுப் போனதுடன், தன்னுடைய ஒரே மகள் துச்சளை என்பவளும் கைம்பெண்ணானாள் என்பதைக் கேட்டு மனக்கொதிப்படைந்த காந்தாரிக்குச் சமமாகத் துக்கங் கொண்டவள் ஒருத்தியுமிராள் தம் மறிவால் அத்துணையும் அடக்கிக் கொண்டிருந்தவர் களையும் பார்க்க முடியாது

திரெளபதியைப் பற்றித் தனித்தொன்றும் கூற வேண்டுவதில்லை இராமாயணம் சீதையின் பெருங்கதை என்றால் மகாபாரதமும் திரெளபதியின் பெருங்கதையேயாம். வேள்வியின் நிலத்தில் பிறந்தவள் சீதை அந்த நெருப்பில் பிறந்தவள் பாஞ்சாலி. நிலத்திற்கும் நெருப் பிற்கும் உள்ள வித்தியாசமேதான் இவ்விரு அழகிகள் குணங்களிலும் ஏற்பட்டுள்ளது ஆங்காரம் அடங்கியவள் சீதை அது பற்றி எரியுந் தன்மையுள்ளவள் திரெளபதி அவமானப்படுத்திய துச்சாதனனுடைய குருதியை வாசனைத் தைலமாகத் தடவிக் கொண்டு, விரித்த கூந்தலை திரெளபதி முடித்துக்கொண்டதே அவள் சீலத்துக்கேற்ற செயலாகும்

இந்திரன் மகனான வாலியைக் கொன்று, சூரியன் மகனான சுக்கிரீவனுக்கு அரசளித்தவர் இராமர் அதற்கு நேர் எதிராகக் கிருஷ்ணர் கதிரவன் மகனான கன்னனுடைய மரணத்திற்கு ஏதுவாகி, இந்திரன் மகனான அருச்சுனனுக்குத் தேரோட்டியாகச் செயல்புரிந்தார் வாலி இருந்தவரையில் யாதொரு குறையுமின்றி எல்லோரையும் தலைமிதித்து அரசாண்டு வந்தான் அவ்விதம் அல்லன் கன்னன் பிறந்தது முதலே ஆசாபங்கம் என்பதன் அவதாரமெனக் கூறும்படி அவன் வாழ்நாள் இருந்துவந்தது

ஆதித்தன் மகனானாலும் அதிரதன் மகன்னென்றே அவமதிக்கப்பட்டான் நேரே பரசுராமரிடமிருந்து அஸ்திரங்களைப் பயின்றான். ஆனாலும் அவன் பிறப்பை அறிந்த அந்த கூடித்திரியப் பகைவர் “நீ கற்ற