பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/137

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

135

அனுசாசனம் என்று பெயருள்ள இரண்டு பருவங்களில் அடங்கியுள்ளன இவற்றைத் தவிரச் சிறப்பாக ஆரணிய பருவத்தில் சில அழகான கிளைக் கதைகள் மார்க்கண்டேயரால் யதிஷ்டிரருக்குச் சொல்லப்படுகின்றன . அவற்றில் நளதமயந்தியின் கதை, சாவித்திரி சத்தியவான் கதை, தரும வியாசன் கதை இவைகள் மிகவும் முக்கியம் பெற்றவை

நள தமயந்தியின் இலக்கியச்சீரை மேனாட்டு அறிஞர்கள் அதிகமாகக் கொண்டாடி, எல்லா மொழிகளிலும் மொழி பெயர்க்கச் செய்திருக்கின் றார்கள் இவற்றைத் தவிர இராமாயணக் கதை முற்றும் சுருங்கச் சொல்லப்படுகின்றது இராமாயணத்திற்கு அதிகமாகவே பாரதத்தில் சிறப்புடைய இலக்கியங்கள் சமஸ்கிருதம், தமிழ் இவ்விரண்டிலும் காணப்படுகின்றன. சாகுந்த்லம், விக்கிரமோர்வசீயம், கிராதார்ச்சுனியம், பாஞ்சராத்திரம், நளசம்பூ, பாரதசம்பூ இவைபோன்றவை சமஸ்கிருத இலக்கியங்களை ச் சிறப்பிக்கின்றன. அவ்விதமாகவே பெருந்தேவனார் பாரதம், வில்லிபுத்துரார் பாரதம், நளவெண்பா, நைடதம் இவை தமிழிலக்கியத்தில் முக்கியம் பெற்றனவாய்க் காணப்படுகின்றன

பாரதத்தின் அளவையும் பொருள் அடக்கத்தையும் கொண்ட நூல் இலக்கிய உலகத்திலேயே வேறில்லை எனலாம் கிரேக்க தேசத்தினரான ஹோமர் கவி ஆக்கிய இலியாது, ஆடிசி இரண்டும் சேர்ந்து பாரதத்தில் எட்டில் ஒன்றேயாம் என்று கணக்கிடப்படுகின்றது பாரதத்தில் உள்ளவற்றையே பிறவற்றிலும் காணலாமேயன்றி, அதில் இல்லாதவற்றை வேறெதிலும் பார்க்க முடியாதென்று கொள்ளும்படி வியாசர் அதைப் பாடினாரென்று அந் நூலிலேயே கூறப்பட்டிருக்கின்றது

பாரதம் பாடிய பெருந்தேவனார்:

சங்க காலப் புலவர் பாரதக் கதையைத் தமிழில் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக இயற்றியவர் அந்த நூலின் செய்யுட்கள் தொல்காப்பியப் பொருளதி