பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

செந்தமிழ் பெட்டகம்

காரத்தில் நச்சினார்க்கினியராலும், யாப்பருங்கலவிருத்தி முதலியவற்றிலும் மேற்கோளாக வந்துள்ளன ஐங்குறு நூறு, அகநானூறு, புறநானூறு, நற்றிணை குறுந்தொகை ஆகிய ஐந்து தொகை நூல்களிலும் இவர் பாடிய சிவபிரான், திருமால், முருகன் ஆகிய கடவுளரின் வாழ்த்துப்பாக்கள் உள்ளன. இவைகளேயன்றி வேறு சில பாடல்களும் பாடியிருக்கிறார்

பாரத வெண்பா

பாரதக் கதையைக் கூறும் ஒரு நூல் (9 ஆம் நூ) இந் நூலாசிரியர் பெயரால் பெருந்தேவனார் பாரதம் என்றும் வழங்குகிறது இது வேறு சங்க காலத்து வழங்கிய பாரதம் வேறு என்பர் சங்ககாலப் பாரதச் செய்யுட்களிலே சில தொல்காப்பியப் பொருளதிகார உரையிலே நச்சினார்க்கினியராலும், வீரசோழியவுரையி லும் புறத்திரட்டிலும் காட்டப் பெறுகின்றன. அவை பாரதப் பாட்டு என்றாவது, குறிப்பிடப் பெற்றுள்ளன அப்பாட்டுக்கள் இப்பாரத வெண்பாவிலே காணப் பெறாமையால், இந்நூல் வேறென்றே கொள்ள வேண்டும் பாரத வெண்பாவைப் பாடிய சிறப்பினால் இவரும் சங்ககாலப் பெருந்தேவனார் பெயராற் பாராட்டப்பெற்றிருத்தல் வேண்டும்

சங்ககாலத்தே வழங்கிய பாரதத்தைப் பாடிய பெருந்தேவனாரும், தொகை நூல்களில் கடவுள் வாழ்த்தைப் பாடித் தந்த பெருந்தேவனாரும் இந்நூலைப் பாடிய பெருந்தேவனாரும் வெவ்வேறு காலத்திலிருந்தவர்களென்றே ஆராய்ச்சியாளர் கொள்வர். இவரைப் பற்றி வேறொன்றும் அறியக்கூடவில்லை

இந்நூல் மூன்றாம் நந்திவர்ம பல்லவன் காலத்தில் எழுதப்பெற்றதென்பர் இது உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாகும் வெண்பாக்களின் இடையிடையே உரைநடை கலந்துள்ளது செய்யுள் நடை நல்ல தமிழாகவும், உரைநடையிலே வடமொழி விரவி மணிப்-