பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

137

பிரவாள நடையாகவும் உள்ளன. அக்காலப் புலவர்கள் நடை அவ்வாறிருக்கும்போலும் அன்றிப் பிற்காலத்தே எவரேனும் கதைத் தொடர்பாக உரை நடையெழுதிச் சேர்த்திருக்கலாம் பாரதவெண்பா என்னும் பெயரிருப்பினும் இடையிடையே ஆசிரியப் பாக்களும் விருத்தப் பாக்களும் அருகியுள்ளன. இது வில்லிபுத்துாரார் இயற்றிய பாரதத்திற்கும் முந்தியது

இந்நூலின் சிறு பகுதியே இப்போது கிடைத்து அச்சிடப் பெற்றுள்ளது உத்தியோக பருவம், வீடுமபரும, துரோண பருவம் ஆகியவை மட்டுமே கிடைத்தவை மூன்று பருவங்களிலும் 818 வெண்பாக்களும், 6 ஆசிரியப்பாக்களும், 6 விருத்தப்பாக்களும் உள்ளன. இந் நூல் 1925-ல் பண்டித அ கோபாலய்யரவர்களால் அச்சாகியுள்ளது