பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

139

வர்களும் காணப்படுகின்றனர் இந்நூலில் இடையில் இரண்டு பாட்டுக்கள் மறைந்து போனதால் முன்நூற்றுத் தொண்ணூற்றெட்டுப் பாட்டுக்களையே இப்போது கொண்டிருக்கிறது சில பாட்டுக்கள் சிதைந்திருக்கின்றன தொடக்கத்திலிருந்து 266 பாட்டுக்கள் வரையில் பழைய சான்றோர் ஒருவர் எழுதிய உரை உள்ளது.

இந்நூல் தொகுப்பில், பாடப்பட்டோருள் முதலில் முடிவேந்தர்க்குரிய பாட்டுக்களும், பின்பு குறுநிலத் தலைவர் பாட்டுக்களும், அவற்றின்பின் புறத்திணைக்குச் சிறந்த சில துறைகட்குரிய பாட்டுக்களும் வைத்து, இறுதியில் முடி வேந்தர்க்குரிய பாட்டுக்கள் சிலவற்றை வைத்து முறைப்படுத்தியிருக்கின்றனர் முடி வேந்தருள்ளும் சேரரை முதற்கண்ணும் பாண்டியரை இடையிலும், சோழரைப் பின்னும் முறைப்படுத்தியிருப்பது சேரபாண்டிய சோழரென்று கூறும் பழைய வழக்கத்தை வற்புறுத்துகிறது; இவ்வேந்தர்க்குரிய அடையாளப் பூவைக் கூற வந்த தொல்காப்பியர், “போந்தை வேம்பே ஆர் என வரூஉம், மாபெருந் தானையர் மலைந்த பூ” (புறத் 5) என இம்முறையே கூறியிருப்பது இங்கே நினைவுகூரத்தக்கது. இம்முறையால் முதற்பாட்டுச் சேரவேந்தனுக்கும், இரண்டாம் பாட்டுப் பாண்டி வேந்தனுக்கும், மூன்றாம் பாட்டுச் சோழ வேந்தனுக்கும், நான்காம் பாட்டுச் சேரவேந்தனுக்கு உரியவாய் வந்து கொண்டிருக்கின்றன கால முறையிலும் இம்முறை வைப்புச் செவ்வையாக அமைந்திருக்கிறது

இம் முறைவைப்பில் சேரமன்னர்களில் பெருஞ் சோற்றுதியஞ் சேரலாதனும், அவனுக்குப்பின் கருவூரேறிய ஒள்வாட்கோப் பெருஞ்சேரலிரும் பொறையும், அவனுக்குப்பின் செல்வக்கடுங்கோ வாழியாதனும் கால முறையில் வைத்துக் குறிக்கப்படுகின்றனர். பாண்டியர்களில் கருங்கையொள்வாட் பெரும்பெயர் வழுதியும், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியும், சோழர்களில் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியும், கரிகாற்-