பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

141

பெண்டு, வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி என்ற பதினைவர் ஆட்சி நலம் இத்தொகை நூற்பாட்டுக்களில் சிறப்பிக்கப்பெறுகின்றது

உலகில் வாழ்வில், “தமக்கென முயலா நோன்றாள், பிறர்க்கென முயலும்” பெரு வாழ்வே வாழ்வானது என்ற கருத்துப் பாண்டி வேந்தர் பண்பாடாக இருந்திருக்கிறது: இவ்வியல்பால், “வல்லாராயினும் மாட்டாராயினும், புகழ்தலுற் றோர்க்கு, மாயோன்போல” இவ்வேந்தர் விளங்கு கின்றனர் “தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தராக லின்” புலவர் பாடும் புகழ் பெறுவது அவர்கட்குப் பெருமிதமாக இருக்கிறது

இனி, சோழ வேந்தர்க்குரிய பாட்டுக்கள் காட்டும் சோழ நாடு, வடவேங்கடமலைத்தொடரையும், கொல்லி மலையையும், பெண்ணையாற்றையும், காவிரி யாற்றையும் கொண்டு இனிய காட்சித் தருகிறது வேங்கடத்திற் பிறந்த யானைகள் காவிரிக்கரையில் சோழர் படைக்கு அணி செய்கின்றன “கோடை யாயினும் கோடா வொழுக்கத்”துடன் காவிரியாறு சோழ நாட்டைப் புரக் கின்றது. “ஒருபிடி படியும் சீறிடம் எழுகளிறு புரக்கும்” நெல்வளம் நிறைந்துளது சோழ மன்னருள், இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி, உருவப் பஃறேர் இளஞ் சேட்சென்னி, கரிகாலன், குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன், குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன், கோப்பெருஞ்சோழன், செங்கணான், செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி, சோழன் நல்லுருத்திரன், நலங்கிள்ளி மாவளத்தான், நெய் தலங்கானல் இளஞ்சேட்சென்னி, போர்வைக்கோப்பெரு நற்கிள்ளி, முடித்தலைக்கோப்பெருநற்கிள்ளி, வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி, சோழன் நலங்கிள்ளி முதலியோர் சிறந்து காணப்படுகின்றனர் o

இம் மூவேந்தரும் தம்முட் பகைமையின்றி ஒத்து வாழவேண்டுமென்ற கருத்துத் தமிழ்ச் சான்றோர்