பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

செந்தமிழ் பெட்டகம்

தெரிகின்றன. அவை ஆசிரியமாலை, நாரத சரிதை, இரும்பல் காஞ்சி, சாந்திபுராணம், பெரும்பொருள் விளக்கம் என்பவை மற்றும் பழைய உரை முதலியவற் றால் நூலின் பெயர் தெரிந்தும், சில செய்யுட்கள் மட்டும் கிடைத்துமுள்ள தகடுர் யாத்திரை, வளையாபதி, குண்டலகேசி போன்றவற்றின் செய்யுட்கள் திரட்டப் பெற்றுள்ளன. கம்பராமாயணம் போன்ற வற்றினின்றும் செய்யுட்கள் திரட்டப்பெற்றுள்ளன. கம்பராமாயணம் இராமாவதாரம் என்னும் பெயரால் வந்துள்ளது புறத்திரட்டுக் கிடைத்ததனால் இந்நூலில் வந்த நூற்செய்யுட்களில் பிழையற்ற பாடமும் சில வரலாற்றுச் சான்றுகளும் கிடைத்துள்ளன

புறப்பொருள் :

தமிழிலுள்ள பொருளிலக்கணம் அகம், புறம் என்னும் இரு பிரிவுகளையுடையது அகப் பொருள் காதலையும், புறப் பொருள் வீரம், கொடை போன்றவற்றையும் உணர்த்தும் மக்களின் வீரத்தையும் கொடையையும் அவர் செயல்களாற் பிறருணர இயலுமாகையால் இவை புறப் பொருளாயின

அகவொழுக்கமும் புறவொழுக்கமும் ஐவகை நில மக்களிடையே நிகழமாதலின் அவ்வாற்றான் ஐந்து வகையாகவும் இவைகளினிடையே நிகழும் ஒழுக்கங்கள் அகம், புறம் என இரண்டு வகையாகவும் கொண்டு, அகத்திணை யேழெனவும் புறத்திணை யேழெனவும் பொருளிலக்கணத்தைத் தொல்காப்பியர் பிரிப்பர்

அம்முறையில், அகத்திணைகளாகிய குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, பெருந்தினை கைக்கிளை என்பவற்றிற்குப் புறத்திணைகளாக முறையே வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் எனக் கொள்ளப்பெற்றன

ஆனால், புறப்பொருள்களை மட்டும் பாடிய பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய நூல் உழிஞை, தும்பை, வாகை, பாடாண், கைக்கிளை,