பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

147

பெருந்திணை, பொதுவியல் என்று பன்னிருவகைகளாகப் பிரித்துள்ளன

இவற்றின் இலக்கணம் :

1 வெட்சி என்பது அரசனுடைய படைத் தலைவருடைய நாட்டிற்குச் சென்று, அங்குள்ள ஆனிரைகளைக் களவினாலே கொண்டு வருதலைப் பொருந்தியது என்பர். இவ்வாறு செய்தல் போரில் ஆனிரைகளுக்குக் கேடு வராவண்ணம் காத்தலென்னும் அறமாகும் என்பர் எனினும், ஒரு நாட்டின் செல்வமான ஆனிரைகளைக் கவர்ந்தால் அந்நாட்டரசன் போர் தொடுக்க வருவான் என்பதையே நோக்கமென்று கொள்ள வேண்டும் பாரதக் கதையிலும் விராடனுடன் போர் தொடுக்கவிரும்பிய துரியோதனன் ஆனிரை களையே கவர்ந்தனன் என்று கூறுவதுணர்க போர் முறையிலே இது வொன்றே களவென்றும், மற்றவை களவல்ல என்றும் ஆசிரியர்கள் கூறுவர் மற்றும் மலையும் மலைசார்ந்த பகுதியும் இதற்குரிய இடமாகும் என்றும், ஐப்பசியும் கார்த்திகையுமான கூதிரும், மார்கழி, தையெனும் முன்பனியும் ஆகிய பெரும்பொழுதும், இரவாகிய சிறுபொழுதும் இதற்குரிய காலமென்றும் புலவர் அமைப்பர் இவர்கள் வெட்சி மலரை அடையாளப் பூவாக அணிவர் இவர்கள் ஆனிரைகளைக் கவராவண்ணந் தடுப்பதும் வெட்சியென்றே தொல் காப்பியர் கூறுவர், கரந்தை கரந்தையை அடையாளப் பூவாக அணிவர் கொட்டைக் கரந்தை யென்னும் பூடு கரந்தையாகும்

2 வஞ்சி யென்பது நாட்டைக் கவரும் விருப்புடைய வேந்தனும், அதனை அவனிடம் விடவிரும்பாத வேந்தனும் பொருதலாகும் விடவிரும்பாத வேந்தன் பொருவதைக் காஞ்சியெனப் பன்னிரு படலம் முதலிய பிற நூல்கள் கூறும் தொல்காப்பியர் வஞ்சி யென்றே கூறுவர் இதற்குரிய இடம் காடும் காடு சேர்ந்த பகுதியும் ஆகும் என்றும், ஆவணி, புரட்டாசித் திங்கள்களாகிய