பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

13

என்ற வேற்றுமையின்றி, எளிய சொற்களுக்கும் பொருள் விளக்கம் செய்யவேண்டியது அவசியமாயிற்று மூன்றாவது, நூல் வழக்கிலன்றிப் பொதுமக்கள் பல்வேறிடங்களிலும் சிதைத்து வழங்கி வந்த சொற்களும் அகராதியில் இடம் பெற்றன. அவர்கள் கல்விபெறாத கீழ்த்தர மக்களோடும் பழகிவந்தார்கள் அம்மக்கள் பேசுவதை உணர்வதும் அவர்கள் வழங்கும் சொற்களை உணர்வதும் அவசியம் எனவே, அவ்வழக்குச் சொற்களும் அகராதியிற் காணுதல் வேண்டும் இவ்வாறாகத் தமிழ் மக்களுள் பல இனத்தவர்களும் வழங்கும் சொற்கள் எல்லாம் அகராதிகளில் அமைவதற்கு இப்பாதிரியார்களே வழிகாட்டியாயிருந்தார்கள்

கி பி 1679-இல் தமிழ்ப் போர்ச்சுகேசிய அகராதியொன்று ப்ரொஇன்ஸா என்ற பாதிரியாரால் இயற்றப் பட்டது; ஆனால், இவ்வகராதி இப்போது மறைந்து விட்டது. இதனை அடுத்துத் தோன்றியது சதுரகராதியாகும் இதுவே தமிழில் முதன்முதற் பிறந்த அகராதி என்று சொல்லலாம் இதனை இயற்றியவர் தைரியநாத சுவாமி என்றும் வீரமாமுனிவர் என்றும் வழங்கிய பெஸ்கி பாதிரியார் ஆவர் இவர் இத்தாலி நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்து கிறிஸ்துமத போதனை செய்து வாழ்ந்தவர்

சதுரகராதி என்றால் நான்கு வகைப்பட்ட அகராதி நூல். என்று பொருள் நான்கு வகையாவன: 1 பெயரகராதி 2. பொருளகராதி 3. தொகையகராதி 4 தொடையகராதி பெயரகராதியில் ஒரு சொல்லுக்குரிய பலபொருள்கள் கொடுக்கப்பட்டிருக்கும். பொருளகராதியில் ஒரு பொருளுக்குரிய பல பெயர்களும் காணப்படும் தொகையகராதியில் இருசுடர் முக்குணம், நாற் படை என்பனபோல நூல்களில் தொகை தொகையாக வழங்கப்பட்டுள்ளனவற்றிற்கு விளக்கங் காணலாம். தொடையகராதியில் செய்யுட்கு வேண்டும் எதுகைச் சொற்கள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன