பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

151


தொல்காப்பிய
இலக்கியம்

தொன்மையிலும், புலவர் பாராட்டும் பண் புகளிலும், தன்மையிலும் இறவாச் சிறப்புடைய தமிழ் நூல் தொல்காப்பியரியற்றியது அவர் பெயரே அதற்கு ஆகுபெயராய் வழங்கும் சிறப்புடையது எழுத்திலும் சொல்லிலும் மாறுதலின்றி, ஒன்றன்பெயர் ஏதாமொரு தொடர்பு பற்றிப் பிறிதொன்றிற்கு வழங்குமாயின், அது தமிழில் ஆகுபெயர் எனப்படும் ஆக்குபவர் பெயரின் உயிரைத் திரித்து, அதனோடு ‘அம் விகுதி புணர்த்தி, அவர் நூலுக்குப் பெயரிடும் தத்தித முறை வடநூல் வழக்கு அதை வட சொல்லுக்கு அன்றித் தமிழ்ச் சொல்லுக்கு ஏற்றத் தமிழ் நூலுக்குப் பெயராக்க, வழக்கும் செய்யுளுமாகிய இரு மரபும் இடம் தராது இத்தமிழ் நூலுக்குத் தமிழாகுபெயரைத் தத்திதமாக்கித் தொல்காப்பியமெனப் பேசுவது பிற்காலப் பிழை வழக்கு

தொல்காப்பியச் சூத்திரவிருத்தி

சிவஞான முனிவர் இயற்றிய தொல்காப்பியச் அத்திரவிருத்தி எனும் இந்நூலில் தொல்காப்பியப் பாயிரத்திற்கும் தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் நூன்மரபில் முதற் சூத்திரத்திற்கும் விரிவுரை எழுதியிருக்கிறார் இது மிகச் சிறந்தவுரை யெனப்புலவர்களாற் பாராட்டப்பெறுகிறது இவ்வுரையில் தமிழிலக்கணம்