பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/156

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

செந்தமிழ் பெட்டகம்

பாண்டியரின் செல்வாகுமிகுந்த கபாடபுரத்தைப் பார்க்கலாம் எனத் தெளிவாகக் கூறுதலாலும், தொல் காப்பியனார் தம் நூலை அரங்கேற்றிய இபாடபுரம் பஃறுளியாற்றுப் பாண்டிநாட்டிலிருந்தது தெளிவாகும்

இன்னும் தொல்காப்பியர் நூலின் வாழ்த்தாய், அவருடன் படித்த பனம்பாரனார் பாடிய பாயிரப் பாட்டிலும், குமரி முதல் வேங்கடம் வரை விரிந்து பரந்த பழைய பஃறுளிப் பாண்டிநாட்டை ஆண்ட நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையில் தொல்காப்பியர் தம் தமிழ்ப் பெருநூலை நிறுவினர் எனும் செய்தி விளக்கப்படுகிறது

அன்றியும் கி.மு.4ஆம் நூற்றண்டுக்கு முந்திய தெனத் துணியப்பட்ட பாணினியாரின் சிறந்த வடமொழி நூலுக்கு முந்திய வியாகரணம் எல்லாம் வழக்கொழிந்து மறுக்கப்பட்டன அக்காலமுதல் வடசொல் எல்லாம் வினை முளையை முதலாகக்கொண்டு விளைந்த தென்னும் கொள்கை இறுதியாக நிறுவப்பட்டு, அது முதல் நிலைக்காத ஆட்சியிலிருந்து வருகிறது

தொல்காப்பியர், பாணினி-பதஞ்சலி முனிவரின் வியாகரணங்கள் பிறக்குமுன் இருந்திறந்த ஐந்திரம்’ நிறைந்தவர் என்று பனம்பாரர் பாயிரப்பாட்டு வற்புறுத்து வதாலும், வினைத்தொடர்பும், விதையும், முளையும் வேண்டாமலே இசை, உரி, பெயர்ச்சொல் வகைகள் எல்லாம் தொல்காப்பியர் சொல்லுவதாலும் பாணினிக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னமே ஆக்கப்பட்டதாதல் தேற்றமாகும் இவை பலவும் தொல்காப்பியர் நூலின் பெருந்தொன்மைக்குப் புறச் சான்றுகளாம்

இனி, இந்நூலின் அகச்சான்றுகளும் இதன் இறப்பவும் முந்திய அறப் பழந்தொன்மையை வற்புறுத்தக் காணலாம் தொல்காப்பியர் நூல் மதுரைக் கடைச்சங்கத்துத் தொகைச் செய்யுள் அனைத்துக்கும்