பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

செந்தமிழ் பெட்டகம்


அகராதிகள் தோன்றுவதற்குமுன் இருந்த நிகண்டுகள் மனப்பாடஞ் செய்வதற்கு என்று ஏற்பட்டன முற்காலத்தில் அச்சுப்பொறி இல்லாதால் மனப்பாடமே வேண்டப்படுவதாயிற்று சுமார் கி பி 10ஆம் நூற்றாண்டிலிருந்து நிகண்டுகளின் வரலாறு நமக்குத் தெளிவாயுள்ளது தமிழில் முதன்முதல் தோன்றிய நிகண்டு திவாகரம் என்பதாகும் இவ்வகை நிகண்டுகளில் முக்கியமானவற்றிலுள்ள சொற்களை யெல்லாம் திரட்டி சதுரகராதி தந்துள்ளது

இவ்வகராதி இயற்றப்பட்டது கி பி 1732-இல் ஏடுகளில் இது பிரதிகள் செய்யப்பெற்றுத் தமிழ்நாடு முழுவதும் பரவியது ஆங்கிலத்தில் டாக்டர் ஜான்சன் தமது அகராதியை 1755-இல் வெளியிட்டார் இதற்குச் சமார் 25 ஆண்டுகட்கு முன்பாகவே சதுரகராதி தோன்றியதாகும் இந்நூலின் இரண்டாந் தொகுதியான (பொருளகராதி) 1819-ல் அச்சிடப்பட்டது நூல் முழுதும் 1824-இல் ரிச்சர்டு கிளார்க் என்பவரது உத்தரவின்பேரில் தாண்டவராய முதலியார், இராமச்சந்திர கவிராயர் என்ற இரண்டு வித்துவான்களாலும் பரிசோதித்து பதிக்கப்பெற்று வெளியிடப்பட்டது இது கிழக்கிந்தியக் கம்பெனியாரின் நிருவாக சங்கத்திற்கு உரிமையாக்கப்பட்டது

கடைசியிற் குறிப்பிட்ட செய்தியால் பாதிரிமார்கள் செய்துவந்த முயற்சியில் ஆங்கிலேயத் துரைத்தனத்தாரும் கலந்துகொண்டு உதவிபுரிந்தார்கள் என்பது புலனாகும் துரைத்தனத்தாருக்கு வியாபாரத் துறையிலும், அரசியல் துறையிலும், படிப்படியாகத் தமிழ் நாட்டுப் பொதுமக்களோடு பழகிவந்த முறையிலும், தமிழ் ஆங்கிலம் இரண்டையும் ஒருசேரக் கற்றவர்கள் தேவையாயிருந்தனர். ஆகவே, இரண்டு மொழிகளையும் கற்பவர்களுக்குப் பயன்படும்படியாக இருமொழி அகராதி தோன்ற வேண்டியதாயிற்று பெப்ரீஷியஸ், ப்ரெய்ட் ஹெப்ட் என்ற இரண்டு ஜெர்மன் பாதிரிகள்