பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

செந்தமிழ் பெட்டகம்

பழமை போலவே, கறையிலா நிறைவு, அறிவு சால் செறிவு, நிரம்பு வளம் வபரம்பிறவாமல் வரையறுத்து வடித்த முறை வனப்பு, மொழிவளர்ச்சிக் கென்றும் தளர்ச்சி தராக் கட்டமைப்புக்களால் ஒப்புயர் சிறப்பு வாய்ந்த (இலக்கண) நூல் தொல்காப்பியர் பெயரால் வழங்குகிறது

தமிழில் மட்டுமன்று; உலகில் நிலவும் பலமொழிகளில் பாராட்டப்பெறும் எல்லா இலக்கணங் களிலும் இல்லாத பழமையும் பெருமையும், அழகும் அருமையும் அமைந்தது யவன அரித்தாட்டில், ஆரியப் பாணினி பதஞ்சலி நூல்களுக்கு முன்னமே, அவர் நூல் களில் நிரம்பா வளமும் வரம்பும், வகுப்பியல் நெறி முறைச் செறிவும், செப்பமும், இயல் எழிலும் நிறைந்து நிற்பதிது எபிரேயம், பழைய பாரசீகம், சீனம் போன்ற பழைய மொழி நூல்களில் காணொணாத் தருக்க வருக்கப் பெருக்கும், செய்யா வரன்முறை இயற்கை வளர்ச்சி வரலாற்றின் நெருக்கும் இருக்கப்பெற்றது தொல் காப்பியர் நூல்

இலத்தீன், ஆரிய இலக்கணங்களில் பொருளியல் பால் சொல்வகை அமையாமல், விதித்த சாரியைவிகுதிகளால் இடம் பால் பிரிவுகள் நடைபெறுகின்றன; திறம்பாச் சில வரம்பால் பெயர் வினைச்சொல்லியல் மாறுதல் தெளிக்கப்பெறாமல் எழுத்துக்களின் உருவும் ஒலியும் திரிபுச் சொற்கள் பலவித மாறுதலையடை கின்றன. உதாரணமாக வடமொழி இலக்கணப்படி மனைவி எனும் ஒரு பொருள் குறிக்கும் ‘பாரி - தாரம் - களத்தி’ எனும் மூன்று சொல்லும் மூவேறு பால்களைக் குறிக்கும்

குருவிலிருந்து கவுரவம் எனவும், சுலபத்திலிருநது செளலப்பியம் எனவும், சுந்தரத்தி லிருந்து செளந்தரம் எனவும் புதிய சொற்கள் பிறக்கும் ஒரு சொல்லின் எழுத்துகளைக் குறுக்கலும், நீட்டலும், குறைத்தலும்,