பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

171

அம்மலைகளில் தோன்றி நிலவும் பேரியாறு, வாணியாறு, கோயம்புத்துர்க்கு அண்மையிலோடும் காஞ்சியாறு (நொய்யல்), காவிரியாறு முதலிய ஆறுகளும் இத்தொகை நூலில் ஆங்காங்கே குறிக்கப்படுகின்றன நேரிமலைப் பகுதியில் சேரவேந்தர் சென்று தங்கி மலைவளம் காண்பதும், அயிரை மண்லயில் கொற்ற வையைப் பரவுவதும், பேரியாறு கடலோடு கலக்குமிடத்தே ஆற்றாட்டயர்ந்து திருமாலை வழிபடுவதும், காஞ்சியாற்றங்கரையில் செல்வமக்கள் வேனிற்காலத்தில் வந்து தங்கி விருந்துண்டு இன்புறுவதும் இதன்கண் இனிது காட்டப்படுகின்றன.

இப்பதிற்றுப்பத்துப் காலத்தில், சேரநாடு கடம்பர் குறும்பொழுந்திருந்தது வடபகுதியில் வானநாடு வரம்பு செய்யப்பட்டிருந்தது கிழக்கிலுள்ள கொங்கு நாடும் சேரர் ஆட்சியிலிருந்தமையின் அதன் எல்லையில் வாழ்ந்த அதியரும் மழவரும் சோழரும் அடங்கியிருந்தனர் இந்நூலைப் பாடிய புலவர்கள், வேந்தர்கள் இசையும் கூத்துமாகிய இன்பம் துறைகளில் ஈடுபட்டுத் தம் கடமைகளில் நெகிழ்ந்திருக்கும் காலத்தில், பாடில் சான்று நீடினையுறைதலின் வெள்வேலண்ணல் மெல்லியன்போன்ம் என உள்ளுவர் கொல்லோநின் உணராதோரே என்று தெருட்டிக் கடமைக்கண் கருத் தூன்றச் செய்தும், இவர் செய்யும் போர்கலால் நாடுகள் அழிவதனை எடுத்துக்காட்டிக் கானுநர் க்ைபுடைத் திரங்க மானாமாட்சிய மாண்டனபலவே’ என அவருள்ளத்தில் அருள் தோற்றுவித்துப் போரை விலக்கியும் செய்துள்ள நற்பணிகள் இந்நூலில் சிறந்து விளங்குகின்றன

ஏனைத்தொகை நூல்களைவிட இந்நூற்கண் வரும் பாட்டுக்கள் பொருள் நிறைந்து, சொற்செறிவு ஜிகுந்து, ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டிருத்தலின், தமிழ் கற்போர் இதனை இரும்புக்க்டலை என இயம்புவ துண்டு