பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

செந்தமிழ் பெட்டகம்


செந்நூல்
நன்நூல்

க்காலத்தில் தமிழ் கற்பவர் முதலில் படிக்கும் இலக்கண நூல் நன்னூலே இலக்கணவிளக்க ஆசிரியர் இந்நூலிலிருந்து 250 சூத்திரங்கள் வரை தமது நுாவிற் சேர்த்திருத்தலை அறியின் இந்நூலின் பெருமை புலனாகும்,

நன்னூல் ஆசிரியர் பவணந்திமுனிவர் இவர் சமணத்துறவி, “ முன்னோ ரொழியப் பின்னோர் பலரினுள், நன்னூலார்தமக் கெந்நூலாரும், இணையோ என்னுந்துணிவே மன்னுக” என்று இலக்கணக்கொத்தின் ஆசிரியரும்,” பல்கலைக்குருசில் பவணந்தி என்னும் புலவர் பெருமான்” என்று நன்னூல் உரைகாரர்களுள் ஒருவரான சங்கர நமச்சிவாயப் புலவருங் கூறியுள்ளனர்

நன்னூல் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் என்னும் பாயிரங்களைத் தவிர, எழுத்ததிகாரம், ச்ொல்லதிகாரம் என்னும் இரண்டு அதிகாரங்களை உடையது. பாயிரங்களில் பழைய நூல்களிலுள்ள சூத்திரங்கள் பல சேர்க்கப்பட்டிருக்கின்றன நுாலினுள்ளுந் தொல்காப்பியத்திலிருந்து ஏழுத்ததிகாரம், சொல்லதிகாரம் ஒவ்வொன்றும் ஐந்து இயல்களை உடையது

நன்னூல் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் என்னும் பாயிரங்களைத் தவிர, எழுத்ததிகாரம்,