பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

173

சொல்லதிகாரம் என்னும் இரண்டு அதிகாரங்களை உடையது பாயிரங்களில் பழைய நூல்களிலுள்ள சூத்திரங்கள் பல சேர்க்கப்பட்டிருக்கின்றன நூலி னுள்ளும் தொல்காப்பியத்திலிருந்து ஏழு சூத்திரங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன எழுத்ததிகாரம், சொல்லதி காரம் ஒவ்வொன்றும் ஐந்து இயல்களை உடையது

நன்னூலார் தொல்காப்பியத்தையும் அதற்கு இளம்பூரணர் எழுதிய உரையையும் பெரும்பாலும் மேற்கொண்டுள்ளார்; சிலவிடங்களில் அவிநய நூலையுந் தழுவியுள்ளார் என்பது தெரிகிறது எழுத்ததி காரத்தில் உள்ள பதவியல்மட்டும் வடமொழி இலக்கணத்தை நோக்கி அமைத்ததாகும் இவ்வியலில் பதங்களின் வகைகள்,அவற்றின் இலக்கணம், பகுபதவுறுப்புக்கள், தற்பவங்களில் வடமொழி யெழுத்துக்கள் திரியும் முறை இவை தெளிவாகக் கூறப்பட்டுள்ளன

தொல்காப் பியத்தில் ஆறு இயல்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ள புணர்ச்சிவிதிகள் இந்நூலில் மூன்று இயல்களில் சுருக்கமாகவும் விளக்கமாகவுங் கூறப் பட்டுள்ளது. ஆதலின் இந்நூலில் உள்ள விதிச் சூத்திரங்களை எடுத்தாளுதல் எளிதாயிருக்கின்றது இந்நூல் சுருங்கிய அளவிற் செய்யப்பட்டதாயினும், தொல்காப்பியத்தில் கூறப்படாதனவும் சங்கச் செய்யுட்களில் காணப்படுவனவு மாகிய சில இலக்கணங்கள் இதில் அமைக்கப்பட்டுள்ளன. இவை முதலிய காரணங்களால் இந்நூல் அனைவராலும் கற்கப்பட்டு வருகின்றது

நன்னூலார் தொல்காப்பியர் கொள்கைக்கு மாறாகச் சிலற்றைக் கூறியுள்ளார். உதாரணமாக, அள பெடையுள் ஒரெழுத்தே மூன்று மாத்திரை பெறும் என்றதும், உயிரெழுத்துவருமிடத்துக் குற்றியலுகரம் கெடும் என்தைக் காணலாம்

சீயகங்கன் என்னும் அரசன் எழுத்து முதலிய ஐந்திலக்கணத்தையும் தொகுத்தும் விரித்தும் இயற்றித்