பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

175

சிவஞானமுனிவர் சங்கர நமச்சிவாயருரையில் இடையிடையே தங்கருத்தினைச் சேர்த்தும், இலக்கணக் கொத்தில் உள்ள சூத்திரஞ் சில சேர்த்தும் விருத்தியுரை செய்துள்ளார். இவ்விருத்தியுரையைப் பின்பற்றி முகவை இராமாதுச கவிராயர் ஒர் உரை எழுதியுள்ளார் விசாகப் பெருமாளையர் தெளிவாக ஒர் உரை எழுதியிருக்கிறார் ஆறுமுக நாவலர் சுருக்கமாக உரை எழுதுயுள்ளார் பின்னர், வை மு. சடகோப ராமாநுஜாசாரியார் கலாசாலை மாணாக்கருக்கு ஏற்றவாறு மிகத்தெளிவாக உரை எழுதியிருக்கிறார் இவை காண்டிகையுரை என்று வழங்கும்

நன்னெறி

சிறுவர்களுக்கான அற நூல்களில் ஒன்று 40 நேரிசை வெண்பாக்களால் ஆனது உவமையும் பொருளுமாக ஒவ்வொரு செய்யுளும் அமைந்திருக்கும் இதன் ஆசிரியர் சிவப்பிரகாச சுவாமிகள் (த க ) முற்காலத்தில் சிறுவர்கள் கற்கும் இலக்கிய வரிசையில் ஆத்தி சூடி, கொன்றைவேந்தன், வாக்குண்டாம், நல்வழி எனக் கற்ற பின்னர் நன்னெறி கற்பது வழக்கம் இப்போதும் சிறுவர்க்கான பாடநூால்களில் இந்நூலின் செய்யுட்களை அமைத்துக் கொண்டு வருகின்றனர்

நனவு நிலை (Consciousness) :

மனிதன் நனவோடு இருப்பது நமது அனுபவத்திலுள்ள ஓர் உண்மை நனவுநிலை என்று சொன்னவுடன் அது எங்கிருக்கின்றது, அது ஒரு சக்தியா, குணமா என்றெல்லாம் ஆராயத் தோன்றும் ஆனால், நனவு நிலையில் நாம் ஆற்றும் செயலைக் குறிப்பிட்டு அதை விளக்கலாமே யொழிய அதை ஒரு தனிப்பட்ட பொருளாகவோ, சக்தியாகவோ நினைப்பதாவது காட்டுவதாவது இயலாது

நமது நனவு நிலை நம் செயலின் ஒரு தன்மையே (Aspect) யாம் ஏனென்றால் நம் செயல்கள் கவனமுள்ள