பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

செந்தமிழ் பெட்டகம்

நனவு (Attentive c.), நனவிலி நிலை (Unconsciousness), தெளிவிலா நனவு (Vague c.) என்ற மூன்று வித நனவு நிலைகளிலிருந்து வெளிப்படுகின்றன ஒரு புத்தகத்தைப் படிக்கும்பொழுது, படிக்கும் வரிகளில் நம் முடைய ஊக்கம் முழுதும் பதிந்திருக்கிறது. ஆனால், புத்தகம், நாமிருக்கும் அறை, வெளியிலிருந்து வரும் ஒலிகள் இவையெல்லாவற்றையும் நாம் அறிந்தே இருக்கிறோம் இதனுடன், நமது செயலைத் தூண்டுவனவாய் ஆழ்ந்த உள்ளிலிருந்து பல இயல்பூக்கங்கள் வேலை செய்கின்றன கவனத்தோடு கூடிய நனவுடனும் நாம் செய்பவை அறிதல்நிலை உணர்ச்சிநிலை இயற்றிநிலை என மூன்றுவிதமாம் இதில் ஒவ்வொன்றும் தனிப்பட்ட ஒரு குணமுள்ளது உணர்ச்சியென்பது ஒருவித அறிதல் என்றோ, ஒருவித இயற்றிநிலை யென்றோ அல்லது இரண்டும் கலந்த ஒருநிலையென்றொ சொல்ல முடியாது இதுபோன்றனவே அறிதலும் இயற்றி நிலையும் ஆனால் இவை ஒருமித்து வரும்

சான்றாக, ஒரு கும்பலின் நடுவே என் பழைய நண்பன் ஒருவன் நின்றுகொண்டிருப்பதை நான் பார்க்கிறேன். இது நான் அறிவது அதனுடன் என் மனம் ஒருவித மகிழ்ச்சியடைகிறது இது ஒர் உணர்ச்சி நான் சும்மாநில்லாமல் அவனருகில் செல்ல முயல்கிறேன். இது இயற்றிநிலை நண்பனை அறிவதும், மகிழ்வதும், அவனருகில் செல்ல முயல்வதும் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து வந்தாலும் எப்பொழுதும் அப்படியே வரும் என்று சொல்ல முடியாது இவை மாறியும் வரலாம்

அறிதல் மட்டுமோ, உணர்ச்சி மட்டுமோ, இயற்றி நிலைமட்டுமோ தனியாக நிகழ்வதில்லை இதில் ஒன்று மட்டும் நிகழ்வதாகத் தோன்றினாலும் மற்ற இரண்டும் மறைவாக இருப்பதைக் காணலாம் ஒரு கணித வினாவின் விடையை அறிவதில் நான் முனைந்திருந்தால் அது அறிதல் மட்டுந்தான் என்று நினைப்பது சரியன்று என் மனத்தில் பல உணர்ச்சிகள் உண்டாகின்றன விருப்பு,