பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/180

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

செந்தமிழ் பெட்டகம்


போர்பாசறை
இலக்கியம்

ங்க நூல்கள் என்று பழைய உரையாசிரியர்களால் பாராட்டப் பட்டவை, பாட்டும் தொகையும் என்று சிறப்பிக்கப் பெறுகிற பதினெண் மேல்கணக்கு நூல்களே யாம் தொகை என்பது எட்டுத் தொகை நூல்களைக் குறிக்கும் பல புலவர்கள் பாடிய பாக்களை எட்டுத் தொகுதிகளாக வகுத்து வைத்த நூல்கள் இவை, இவற்றில் வரும் பாக்களில் மிக நீண்டு வரும் பாக்களைப் பாட்டு என வழங்கி, அத்தகையை பாட்டுக்கள் பத்தினையும் திரட்டி வைத்த நூலே பத்துப்பாட்டு ஆகும் இதில் வரும் பாட்டின் சிற்றளவு 103 அடிகள்; பேரளவு 782 அடிகள்

இவற்றில் ஆற்றுப்படையாக 5 நூல்கள் அமைந்துள்ளன. தொல்காப்பியக் கொள்கைப்படி, நிலையாமையை வற்புறுத்தும் காஞ்சித் திணையில், மதுரைக் காஞ்சி என்ற பாட்டு அமைந்துள்ளது, அகப்பொருளில் குறிஞ்சி, முல்லை, நெய்தலை, பாலை, மருதம் என்ற ஐந்தில் மருதம் நீங்கலாக, மற்றை நான்கையும் நான்கு பாட்டுக்கள் கூறுகின்றன அவற்றுள் குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை என்பன தம் பெயராலேயே திணையை விளக்கும் நெடுநெல்வாடை என்பது நெய்தற்றிணை எனக்கூறலாம் என்றாலும், அகப்பாட்டில் மக்களில்