பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

செந்தமிழ் பெட்டகம்



நான்காம் பாட்டாம் பெரும்பாணாற்றுப்படை என் பது 500 அடிகளால் அமைந்த ஆசிரியப்பா இதனைப் பாடியவர் கடியலுார் உருத்திரங் கண்ணனார் இவர் பெயர் உருத்திரன் என்பது இவருடைய தந்தையார் பெயர் உருத்திரன் என்பது இந்தப் பாட்டுத் தொண்டைமான் இளந்திரையனது புகழைக் கூறுவது இவன் காஞ்சியிலிருந்து அரசாண்டவன்; சங்கப் பாடல்கள் சிலவற்றைப் பாடியவன்; பல்லவர்களது முன்னோன் என்று சிலரால் கருதப்படுகின்றவன் இப்பாட்டும் யாழினை மனம் கவரப் புனைந்துரைப்ப தோடு தொடங்குகிறது

இந்தப் பாணனது வறுமையைச் சுட்டி வருகின்ற பாணன், திரையனிடம் போனால் யானையும் குதிரையும் வாரிக் கொண்டு வரலாம் என்று ஊக்கம் ஊட்டுகின்றான்; அவனுடைய குடிப்பெருமையும், கொடியோர் இல்லாத அவன் நாட்டின் சிறப்பையும் கூறி, மற்றைய ஆற்றுப் படைகளில் போல் அவன் ஊருக்குச் செல்லும் வழியைக் கூறும் வழியாகக் அவன் நாட்டுப் பூகோளத்தை இலக்கியச்சுவை தோன்றப் பாடுகின்றான். உப்பு வாணிகர்கள் தங்களுடைய வண்டிகளிலே வீட்டினையே ஏற்றிச் செல்வதுபோல் போகின்ற வியப்பி னையும், அங்கே மிளகு பொதி ஏற்ற வருவார் முதலியோரிடம் சுங்கம் வாங்கிக் கொண்டு,காவலாளர் கவர்த்த வழியைக் காக்கின்ற பெருமையையும் கொண்டு அவனது குறிஞ்சி நிலப்பெருமையை அறியலாம்

எயிற்றியர் ஈச்சம் ஒலை வேய்ந்த குடிசையில் பிள்ளை பெற்றவள் வீட்டிலே கிடக்கத்தாம் போய்ப் புல்லரிசி கொண்டு வந்து, கிணற்று நீரில் இட்டு, முரிந்த அடுப்பில் ஏற்றிச் சமைத்து, ஊன்புழுக்கலோடு விருந்து தரும் பெருமையினையும், பன்றியும் முயலும் வேட்டையாடி, வில்லும் அம்பும் சார்த்திய வீட்டில் உடும்பின் வறுவலை விருந்தாகத் தருவதனையும், குறிஞ்சி நிலத்துப் பெருமையாகப் பாடுகின்றார் புலவர்: முல்லை