பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

185

நிலத்தில் இடைப்பெண் மோர் விற்றுக் குடும்பத்தைக் காப்பாற்றி நெய் விற்று எருமை வாங்கிச் செல்வத்தால் சிறக்கின்ற நுட்பத்தைக் குறித்துவிட்டு, அங்கே கிடைக்கும் பாலோடு சேர்ந்த தினை அரிசி விருந்தினையும் வாயாரப் புகழ்கின்றார் அங்குள்ள மக்களது இயல்பினை இருந்தது, இருந்தவாறே பாடுகின்றார் மருத நிலத்தில் கோரையில் பூவைக் கட்டிச் சூடிக்கொண்டு உழவர்கள் இனிதே தங்கள் தொழிலை வளமெலாம் பெருக உழுது விளைவிக்கும் பெருமையைப் பாராட்டி அங்குக் குழவிகள் விளையாடும் வீட்டிலே வெண்ணெல்லின் சோறும், கோழிக்கறியும், கருப்பங் கட்டியும், கள்ளும் விருந்தாக வருதலைப் புகழ்கின்றார்; வலைஞர் வாழும் நெய்தல் நிலத்தில் வடித்த கள்ளும், மீனும், வந்தார்க்கு அவர்கள் வழங்குவதனைக் கூறித் துண்டிலைப் புனைந்துரைக்கின்றார்.

அடுத்துள்ள அந்தணரது தூய இருப்பில் மாங்காய் ஊறுகாயுடன் சோறு விருந்தாகக் கிடைப்பதில் ஈடுபடுகின்றார்; நீர்ப்பெயற்று என்ற கடற்கரைப் பட்டினத்தின் செல்வத்தினையும் கலங்கரை விளக்கத்தினையும் தமிழ் நாட்டின் பழைய வாணிகப் பெருமை யெல்லாவற்றையும் நம் கண்ணெதிரே தோன்றப் பாடுகின்றார் பிறகு காஞ்சியில், வெஃகாவில் காந்தளஞ் சிலம்பில் களிறு, படிந்தாங்குப் பாம்பணைப்பள்ளி அமர்ந்தோனைக் காட்டுகின்றார்

காஞ்சி நகரின் சோலைகள், தெருக்கள் இவையெல்லாம் பிரமன் பிறந்த தாமரைப் பூப்போல்தோன்ற, அதனக் காணக் கூட்டம் கூட்டமாக அரசரும் காத் திருக்தின்றனர், “ அவனைப் பாணர்களே நீங்கள் பாடினால் விருந்துட்டி உங்கள் விறலியர்க்குப் பொற்றாமரை அணிவித்து, உங்களுக்குப் பொன்னரி மாலையும் சூட்டி வெள்ளைக் குதிரை நான்கு பூட்டித் தேரில் உங்களை ஏற்றிப் பரிசில் தந்து விடை கொடுப்பான் “ என்று வந்த பாணன் கூறுவது போல் கூறி முடிக்கின்றார் ஐந்திணை,