பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

17

வின்ஸ்லோவின் தமிழ்-ஆங்கில அகராதி மிகவும் பெரிய நூல், எல்லோருக்கும் எளிதில் கிடைக்கக் கூடியதன்று பொதுமக்களது தேவைக்கு வேறோர் அகராதி வேண்டப்படுவதாயிற்று இத்தேவையை நிரப்ப, 1897-இல் தரங்கம்பாடி அகராதி தோன்றியது இது பெப்ரீஷியஸ் அகராதியை ஆதாரமாகக் கொண்டது ஒரு முக்கியமான முறையையும் இது கையாண்டது டாக்டர் க்ரால் என்பவர் தமிழில் முக்காலத்தும் வரும் வினைவிகற்பங்களை யெல்லாம் நன்கு ஆராய்ந்து வினையடிகளை 13 வகையாகக் கணக்கிட்டிருந்தனர் இவ் வகையை இவ்வகராதி மேற்கொண்டு ஒவ்வொரு வினையடியையும் அது என்வகையைச் சார்ந்தது எனக் குறிப்பிட்டுச் சென்றது இதனால் வினைவிகற்பங்களை யெல்லாம் அகராதியில் கொடுக்கவேண்டிய அவசியமில்லாமற் போயிற்று இங்ஙனமாக இருமொழி அகராதிகள் பல படியாய்த் திருத்தமடைந்து வரலாயின

ஆனால், ஒருமொழி அகராதி விருத்தியடையாது ஒரு நிலையிலேயே வெகுகாலம் நின்றுவிட்டது யாழ்ப்பாண அகராதியொன்றுதான் பயன்பட்டு வந்தது யாழ்ப்பாணத்தில் நீதிபதியாயிருந்த கதிர்வேற் பிள்ளை ஒரு சிறந்த பேரகராதி வெளியிட பெரும் முயற்சிகளைச் செய்தனர் இவ்வகராதியில் ஒரு பகுதியை இவர் எழுதி முடித்தனர் இவ்வகராதி முழுவதையும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் முற்றுவித்து வெளியிட்டனர் இக் காரணத்தால் தமிழ்ச்சங்க அகராதி என இதனை வழங்குவர்

இத் தமிழ் அகராதி ஒருபுறமிருக்க, தமிழ்-ஆங்கில அகராதி பலவகையில் செப்பமடைய இடமிருந்தது முதலாவது, சங்க இலக்கியம் முதலிய ஆதார நூல்கள் பல வின்ஸ்லோவிற்குப் பின்னரே, அச்சில் வெளி வந்துள்ளன. இவற்றை நன்கு பயன்படுத்துவது அவசியமாயிற்று இரண்டாவது, சொற்களுக்குப் பொருள் எழுதுவதில் வின்ஸ்லோ முதலியோர்

செ பெ- 2