பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

செந்தமிழ் பெட்டகம்

பலப்பல ஒசைகள் எழுவதனை வீறுகோளணி ஒரு சிறிதுமின்றி, உள்ளது உள்ளவாறே எல்லார் மனதும் இனிக்கப் பாடுகிறார் புலவர் விழாவைப் போன்றது அவனுடைய மலை மேலும் பல பாதுகாவல்களைக் கூறுகின்றான் வழிகூறும் கூத்தன் மலையைக் கடந்து ஆயர் இடத்தே சென்றால் அவர்கள் தரும் விருந்தினைக் கூறுகின்றான் பின் நன்னனுடைய மருத நாட்டு வளம் காக்களும் பள்ளிகளுமாயிப் பழையரது விருந்தோடு வரவேற்கின்றது “ ஆறு எனக் கிடக்கும் தெருக்கள், மலையென ஓங்கும் மாடங்கள், இவையுள்ள அவன் ஊர், அருகேதான் உண்டு அவன் எதிரே சென்றால் பல வகைப் பொருளையும் காணிக்கையாகத் தந்து பலர் காத்துக் கிடக்கக் காண்பீர் அவனை நீங்கள் பாடியதும் நும்மில் தலைவன் தாமரைமலைய, விறலியர் விளங் கிழை அணியத் தந்து நீரியக்கம் போல் செல்லும் தேரும், மலைபோன்ற யானையும், மாட்டு மந்தையும், குதிரை களும், மண் தின்று கிடந்த பொற்காசுகளும் வாரி வழங்கி நன்னன் வழி விடுவான் “ என்று வந்த கூத்தன் கூறுவது போல் பாடி முடிக்கின்றார் புலவர்

திருமுருகாற்றுப் படை என்பது பத்துப் பாட்டின் முதலிலே அமைந்த ஆற்றுப் படை இது 317 அடிகளால் அமைந்த ஆசிரியப்பா இதனைப் புலவர் ஆற்றுப் படை என்று நச்சினார்க்கினியர் விளக்குகின்றார் பிற ஆற்றுப் படைகள் எல்லாம் வழிகாட்டப்படுகின்றவனது குடிப் பெயரால் பெயர் பெறும்

முருகனிடம் வழிகாட்டப் படுவோர் உலக மக்கள் அனைவரும் ஆதலின் அந்த வகையால் இதனை வேறுபடுத்த முடியாது புரவலன் பெயராலேயே முருகாற்றுப்படை என இந்த நூல் பெயர் பெறுகிறது ஆசிரியரின் பொதுமை அறப் பெயராலேயே இவ்வாறு அங்கு விளங்குகின்றது.'உலகத்தில் எல்லோர் அறிவையும் மயக்கிக் குழப்புவது, நம்மை தீமைகளும், இன்ப துன்பங்களும் உலகில் சிக்கிக் கிடக்கின்ற நிலையேயாம்.