பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

செந்தமிழ் பெட்டகம்

லுள்ள முதுவெள்ளிலை என்ற ஊரினை வென்றுAபின் தலையாலங்கானத்து ஏழரசரை ஒரே சமயத்தில் அஷ்ன் வென்ற புகழினைப் பாடி, “ ஆடுதிறல் உயர் புத்ழ் வேந்தே” என்று இந்த நயமெல்லாம் தோன்ற அவன்ன அன்புடன் புலவர் அழைக்கின்றார் “ பல்குட்டுவன்கோ, பரதவர் ஏறு” என்று அவன் வெற்றியைப் புகழ்ந்து, அவனுடைய போர்ச் சிறப்பினைத் தொல்காப்பியத்திற்கு உரிய புறத்திணைத் துறைகள் தோன்றப் பாடுகின்றார் கொள்ளார் தேயம் குறித்த கொற்றம் தொல் எயிற்கு இவர்தல், குடுமி கொண்ட மண்ணும் மங்கலம் முதலியன எல்லாம் இப்பாட்டில் வருகின்றன” பாழாயின நின்பகைவர் தேயம் அரசியல் பிழையாமல் அறம் வளர்த்த பெரியோர் சென்ற வழியில் சென்று வளர்பிறைபோல் வளர்க நின் கொற்றம்” என்று வாழ்த்தி, அவனுடைய நட்பினையும் பழிக்கு அஞ்சும் பெருமையினையும் சிறப்பித்துக் கூறி, அவனைச் செவி சாய்த்துக் கேட்கு மாறு புலவர் செய்கின்றார் “ இனி இந்த உலகத்துப் பொருளோடு மேலும் என்ன தொடர்ப்பாடு? பெரிய தொரு கடவுள் நிலை கூறுகின்றேம்; உன் துன்ப மெலாம் கெடுவதாக” என்று சுட்டிக் காட்டுகின்றார்

கரும்பாலை முதலிய பல ஒசைகளோடு விளங்கும் மருத நிலமும், பலபல நிறங்களோடு பூத்துக் கிடக்கும் முல்லை நிலமும், கிளிகடி பூசலும், யானையையும் பன்றியையும் வேட்டையாடும் ஆரவாரமும் என்ற இவை மலையில் எதிரொலிக்க வளம்படைத்துக் கிடக்கும் குறிஞ்சி நிலமும், நிழலும் தன் உருவிழக்கும் பாலைநிலமும், கப்பலில் ஏற்றிவந்த குதிரையோடு வேறுபிற பொருள்களால் சிறந்த நெய்தல் நிலமும், பாண்டியநாட்டைச் சிறப்பிக்கச் சிறப்பிக்கஅதனால் உயருகின்றது மதுரையம்பதி வெளியே சோலைகள், வைகையின் துறைதோறும் பெரும்பாணர் குடியிருப்பு, அகழ்மதில், மதிற்கதவம், அதன்மேல்மலைபோலுயர்ந்த மடம், அதனைத்தாண்டியுள்ளே சென்றால் ஆறு