பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

195

போன்ற பெரிய கடைத்தெருக்கள், பலபல விழாக்கள், விற்கும் பலபல பொருள்களையும் சுட்டி எழுதி எடுத்துக் கட்டியுள்ள கொடிகள் இவற்றை எல்லாம் பாடிக் கொண்டு, மதுரை ஒன விழாவிற்குக் கொண்டு செல்கின்றார்

பூ விற்பவர், சுண்ணம் விற்பவர், வெற்றிலைப் சுண்ணாம்பும் விற்பவர், பல்வேறு தின்பண்டங்களையும் எல்லா மாந்தரும் சிரித்து மகிழ்ந்து வாங்க வீடு வீடு சென்று விற்பவர், இப்படிப்பலரை ஒன விழாவிற் காணலாம், இங்கு வழிபெற்றுக் கடந்து போவது போரிடைத்தப்பிப் போவது போலாகுமாம் இவ்வா றெல்லாம் திருவிழாவின் ஏழாம் நாள் மாலையில் பகலில் கூடிய நாளங்காடியில் எழுந்த ஆரவாரம் இது செல்வர் களது குதிரை காற்றைப் போலப் போகவும், பெண்கள் போகின்ற மனமெலாம் தெருவிலே வீசவும், பேரிளம் பெண்டிர் குழந்தைகளைத் தழுவித் தூக்கிக்கொண்டு, பூவும் புகையும் ஏந்திக் கடவுளைத் தொழுகின்றனர்.

அந்தணர் பள்ளியும், நோன்பு நோற்கும் பெரியோர் வாழும் நறும் பூஞ்சேர்க்கையும், தராசுகோல் போல அறங்கூறும் சபையும், மந்திரிகள் சபையும், நாற்பெருங் குழுவும் காணலாம் சங்கு கடைவோர், இரத்தினங்களைச் சாணை பிடிப்போர், நகைகள் செய்வோர், துணிகள் விற்போர், ஒவியம் எழுதுவோர் இவர்களை எல்லாம் மதுரையில் நிறையக் காணலாம், பலவகையான பழங்கள், உணவுகள் இவையெல்லாம் மாலையில் விளங்கும் அல்லங்காடியில் வருகின்றன, இரவு வந்ததும் பெண்கள் விளக்கேற்றிப் பூக்களைச் சூடிக்கொண்டு கணவன்மாரோடு இன்பமாய்க் காலங்கழிக்கின்றனர் பரத்தை மகளிர் வாழ்வும் அங்குண்டு குழந்தையைப் பெற்ற பெண்கள் கடவுளை வழிபடச் செல்லுகின்றனர் நடுயாமத்தில் மகளிரும் கடைவிற்ப வரும் தூங்குகின்றனர் கள்வரைப் பிடிக்ககாவலாளர்கள் மழை பெய்யும் போது திரிந்துவருகின்றனர் பொழுது விடிந்த