பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

197

மிகுதி நிற்கும் அகப்பாட்டுக்களில் முதலாக வருவது ஐந்தாம் பாட்டம் முல்லைப்பாட்டு இது 103 அடிகள் கொண்டது இதனைப் பாடியவர் காவிரிபூம் பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் வணிகராயிருந்தும் சிறந்ததொரு தமிழ்ப்பாட்டைப் பாடியதால் ‘ந’ என்ற சிறப்படையோடு நப்பூதனார் எனத் தமிழ் உலகில் இன்றும் அவர் போற்றப்படுகின்றார் இதற்கடுத்துள்ள இரண்டு பாட்டுக்களும் நெடுஞ்செழியனைப் பற்றியன ஆதலின், இதுவும் அந்தப் பாண்டியனைப் பற்றியதே எனச் சிலர் கருதுகின்றனர் இந்தப் பாட்டு மூன்று பிரிவுகளாகப் பிரியக் காண்கின்றோம்

முதற் பகுதியில் வாமனர் திருவிக்கிரமாவதாரம் எடுத்ததுபோலச் சிறிய மேகம் வான் முழுதும் பரவி மழை பொழிகின்ற காட்சியையும், அந்த மழையில் ஒருமாலைக் காலத்தில் நாழியில் நெல்லும் முல்லைப்பூவும் கொண்டு சென்று தூவிப் பெருமுது பெண்டிர் எதிர் காலத்தினை விளக்கத் “ திடீரெனக் கேட்கும் நற்சொல்லை நாடி நிற்கின்றதனையும் (விரிச்சி), தலை வியின் துயரம் தீரத் தலைவன் எப்போது வருவான்” என்று அறிதற்கு அன்போடும் அச்சத்தோடும் நிற்கின்ற இவர்கள் காதில் விழ, ஓர் இடைப்பெண், தாயைப் பிரிந்த கன்றுகளின் துயரத்தை நோக்கி, “இப்பொழுதே உங்கள் தாய்மார்கள் வருவார்கள்” என்று கூறி ஆற்றுவதனையும், அதுகேட்டு அவர்கள் தலைவியிடம் வந்து, “தலைவன் வருவான்” என உறுதி கூறுவதனையும், அவர்கள் கூறும் உறுதியில் நம்பிக்கை கொள்ளாது, தலைவி வருந்துவதனையும் புலவர் பாடுகின்றார்

பாட்டின் இரண்டாம் பகுதி தலைவனது போர்க் களத்திற்குப் போகின்றது காட்டாறு சுற்றியுள்ள நல்ல இடத்தில் புதர்களையெல்லாம் வெட்டி முள்ளையே மதிலாக இடப்பெற்றுள்ளது பாடி அங்கே வீடுகள் ஒழுங்காக இருக்கின்ற தெருவிலே புளியேப்பம் மிக்க