பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

செந்தமிழ் பெட்டகம்

அகராதிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நயம் இருந்தது இந்நயங்கள் அனைத்தையும் ஒருங்கே கொணர்ந்து அவற்றை இன்னும் ஒழுங்காக விருத்தி செய்வதும் வேண்டியதாயிருந்தது மூன்றாவது, சொற்பொருள்களை அமைப்பதில் சில நெறிகளைக் கையாளுவதும் அவசியமாயிற்று

தமிழ்-அகராதி நூல்கள் பலவும், பொருள்களையும்கூட, அகராதிக் கிரமத்தில் அமைத்தன. இது தவறாகும் வரலாற்று முறையிலும், இயலாத இடங்களில் கருத்து வளர்ந்து சென்ற முறையிலும் இவற்றை அமைக்க வேண்டியது இன்றியமையாததாகும் நான்காவது சொல்லுக்குப் பொருளாகப் பரியாயச் சொற்களைக் கொடுப்பது போதாது சொல்லுக்குரிய பொருளின் இலக்கணத்தையும் வரையறை செய்யவேண்டும் இவ்வாறு செய்யும் வழக்கம் தமிழ் அகராதிகளில் பெரும்பாலும் இல்லாமலிருந்தது, பரியாயச் சொல்லைக் கூறுவதே போதியதெனக் கருதப்பட்டது

தமிழ்-ஆங்கில அகராதிகளில் கொடுக்கப்பட்டுள்ள இலக்கணங்களும் ஒவ்வொரு வகையில் பிழைபாடு உடையனவாயிருந்தன. இக்குறைகளெல்லாம் நீங்க வேண்டுவது அவசியமாயிற்று ஐந்தாவது சொல்லின் பிறப்பைக் குறித்து அகராதியாளர்கள் பெரும்பாலும் கருத்துச் செலுத்தியதேயில்லை சில தமிழ்ச் சொற்களுக்கு வடமொழி மூலங்கள் தரப்பட்டிருந்தன பிற திராவிட மொழிகளிலிருந்து பிறப்பொத்த சொற்கள் காட்டப் பெறவில்லை ஆறாவது, மேற்கோள் காட்டுவதில் தகுதியான முறைகள் கையாளப் பெறவில்லை தக்க முறைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள் கொடுப்பது அவசியமாயிருந்தது

மேற்குறித்த அம்சங்களிற் பெரும்பாலுங்கொண்டு திருத்த மெய்தியது சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள தமிழ்-லெக்ஸிகன் ஆகும் இதுவும் அரசினர் ஆதரவில் சாண்ட்லர் என்ற அமெரிக்கன்