பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

செந்தமிழ் பெட்டகம்

யானைகள் காவல் நிற்கும் இடையில் கூடாரம் அடித்து, வேல்களைச் சுற்றிக் கிடுகுகளை வரிசையாக வைத்து, விற்கோட்டையாகக் கட்டியுள்ள விடுதியில் அரசனுக்கெனச் சித்திரத் திரையிட்ட இடத்தில் பெண்கள் வாளும் விளக்குமாய்ச் சுற்றிவர, நடுயாமத்தில் மணியோசையெல்லாம் அவிந்துபோகின்றன, பின் களைத்துப் போன காவலாளர் காற்றில் புதர்கள் அசைவது போல் தூங்கி விழுந்து கொண்டு நடையாடி வருகின்றனர் நாழிகை அளப்போர் அரசனுக்கு நாழிகை கூறுகின்றனர் யவனர்கள் புலிச் சங்கிலி விட்டுப் படிக மணி விளக்கு காவல் நிற்க அரசன் இருக்கிறான்

வீரர்கள், யானைகள் குதிரைகள், இவையெல்லாம் போரால் மெலிந்து, புண்பட்டு, உலக வாழ்வினை வெறுத்து நிற்கின்ற காட்சியினைப் பள்ளிமேல் கை யூன்றி நினைத்துக் கொள்கின்றான் அரசன், தன் விரலால் வீழ்கின்ற கண்ணியைத் திருத்துகின்றான் அதில் ஒருவெற்றி பிறக்கின்றது இவ்வாறு அரசன் தூங்காது கிடக்கின்றதனை இரண்டாம் பகுதி விளக்குகின்றது மூன்றாம் பகுதியில் தலைவி தன்னுடைய கட்டிலின்மேல் வீழ்ந்து கிடந்து, தன்னுடைய நெஞ்சினை அவனிடம் செல்லவிட்டமையால் தனியே கிடந்து, அவன் வருந்துவது போலெல்லாம் அவள் வருந்துகின்றாள் பின்னர் மழையில் வரும் தண்ணீர் விழுவதனை உற்றுக் கேட்டுக் கொண்டிருக்கின்றாள் அந்தச் சமயத்தில் அவள் காதெலாம் குளிரக் காட்டின் அழகெலாம் கண்டு வெற்றியோடு திரும்புகின்ற தலைவன் ஏறிய குதிரைகள் ஆரவாரிக்கின்றன. இன்ப ஆரவாரம் கேட்கிறது

இப்பாட்டிற்கு வேறுபல பொருள்கள் பலர் கூறியிருந்தாலும் இவ்வாறு பொருள்கொள்வது நல்லதெனத் தோற்றுகின்றது போரின் கொடுமையைக் காட்டி, அதில் தலைவன் வெல்லுவான் என்று தன்னுடன் இருந்தார் கூறியதைத் தலைவி கேளாது அவன்