பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

201

பட்டினப் பாலை என்னும் ஒன்பதாம் பாட்டு இது 301 அடிகளால் அமைந்தது; வஞ்சியடிகள் நிறைய வருதலின் இதனை வஞ்சி நெடும்பாட்டு என்பர் இதனைப் பாடியவர் பெரும்பாணாற்றுப்படை பாடிய கடியலுார் உருத்திரங் கண்ணனாரே இந்தப் பாட்டுக்குத் தலைவன் சோழன் கரிகாற் பெருவளத்தான் என்று கூறுவர் அவனே பெருநராற்றுப் படைக்கும் தலைவன் ஆனால் இந்தப் பாட்டில் திருமாவளவன் என்ற பெயர் மட்டுமே வருவதால் கரிகாற்பெருவளத்தானின் பெயரனான திருமாவளவனே இதன் தலைவன் என்பர் வேறுசிலர் காவிரியின் பெருஞ் சிறப்பு வானம் பொய்க்கினும் தான் பொய்யாத நிலையோடு தொடங்குகிறது இந்தப் பாட்டு, கரும்பும் நெல்லுமாய்க் கிடக்கின்ற சோழநாட்டில் வாழை, கமுகு, மஞ்கள், மா, பனை, சேம்பு, இஞ்சி என்பவை விளைந்துள்ள இடத்தில் எருமைக் கன்று நெற்கூட்டின் நிழலிலே தூங்குகிறது அந்நாட்டு மக்கள் காட்சி அளிக்கின்றனர் உலர்த்திய நெல்லைத் தின்ன வரும் கோழிமேல் குழையை எறிகின்றனர் பெண்கள்; அது குழந்தைகள் உருட்டும் சிறு தேருக்குத் தடையாகின்றது இத்தகையன அங்குள்ள பாக்கங்கள் படகுகள் கழிசூழ் படப்பையில் உப்பை விற்று நெல்லோடு வந்து குதிரைகள்போலக் காவிரிப்பூம் பட்டினத்தில் கட்டப்பெற்றிருக்கின்றன

இருகாமத்து இணையேரி உண்டு; கோட்டைக் கதவில் புலிப் பொறி தோன்றுகிறது, அறச்சாலைகளில் சோறாக்கிய கஞ்சி ஆறாக ஓட, அதில், “யான் முந்தி நீ முந்தி” என்று எருதுகள் பாய்ந்து சேறாக்கத் தேரோடியதும், அவையெலாம் தூசாகப் பறந்து வெள்ளிய அரண்மனையின் மேல் படிவதால் அரண்மனை நீறாடிய களிறு போல அழுக்கேறித் தோன்றுகின்றது எருத்து மாடுகளின் சாலைகள், தவப் பள்ளிகள், தூதுணம் புறாக்கள் ஒடுங்கிநிற்கும் காளிகோயில், இறாமீனும் ஆமையும். தின்று, அடப்பம் பூவும், ஆம்பம் மலரும் சூடிக், கவண்