பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

செந்தமிழ் பெட்டகம்

வறண்டு, கலைமான் துள்ளி விளையாடும் காடாகின்றன விழாக்கள் நிகழ்ந்த மந்திரங்கள் பேயாடும் இடமாகின்றன கிளி கொஞ்சிய வீடெலாம் கோட்டான் குழறும் பாழ் இடமாகின்றன. அதனாலும் அமைதி பெறாது, “கடலைத் தூர்ப்பேன், மலையை அகழ்வேன், வானை வீழ்த்துவேன், காற்றை மாற்றுவேன்” என்று வளவன் முனைந்து செல்லுகின்றன் எல்லா அரசரும் தன் அடி பணியச்செய்து, தன்னுடைய புதல்வர் ஏறி விளையாடுதலாலும், மனைவிமார் தழுவதலாலும் செஞ்சாந்து சிதைந்த மார்பினோடு சிங்கம்போல் தோன்றுகின்றான் திருமாவளவன் இவ்வாறு புகழ் கின்றது இப்பாட்டு, இவனது போரின் கொடுமையை உணர்திய இப்பாட்டு, இவ்வரசன் தன்னுடைய பகைவர்மேல் இவ்வாறு வீசத் தூக்கிய வேலைவிடக் கொடிதாகும், தலைவியைப் பிரிந்து நாம் செல்லும் கானம் என்று தலைவன் நெஞ்சுக்கு உணர்த்துகின்றது போலப் பாடி முடிக்கின்றது

திருமாவளவனது செங்கோலின் அருளெலாம் உணர்த்திய பின்னர்த் தலைவன், தலைவியின் தோள் அவனது செங்கோலிலும் மிகமிகக் குளிர்ந்து இன்பமாகும் என்கிறான் அவ்வாறாயின் எங்கே பிரிவது? பட்டினம் பெற்றாலும் அவளை விட்டு வாரேன் என்று தலைவன் கூறுவதாக இந்தப் பாட்டு முடிகின்றது காவிரிப் பூம்பட்டினத்தையும் திருமவளவன் போர் வேலையும் அவனது செங்கோலையும் புகழும் முகத்தால் பாலைப் பிரிவின் துன்பத்தையும் பிரியா நிலையில் இன்பத்தையும் மிகமிகப் புதுமை தோன்றிப் பாடியுள்ளவை புலவர்களுக்கெல்லாம் ஒரு பெருவிருந்தாம் இந்தப் பாட்டுப் போகின்ற போக்கில் காவிரிப் பூம்பட்டினத்தின் வளமும், இயல்பும், பண்டைய தமிழர் பண்பாடு தோன்றுகின்ற சிறப்பும் கூறுவதானது வரலாற்று நூலாராய்ச்சிக்குப் பெரிய கருவூலமாக விளங்குகிறது அகப்பொருளும் புறப்பொருளும் இயைந்த இயைபும் நுட்பமுடையதாரும்