பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

205

முடிவாக ஆராய நிற்பது எட்டாவதாகிய குறிஞ்சிப் பாட்டு 261 அடிகளை உடைய ஆசிரியப்பா வாக அமைந்த இந்த நூலுக்குப் பெருங்குறிஞ்சி என்ற பெயரும் உண்டு இதனை இயற்றியவர் கபிலர்; ஆரிய அரசன் பிரகத்தத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்காக இதனைப் பாடினார் என ஒரு வரலாறு உண்டு தமிழ் அறிவுறுத்துவது என்றால் தமிழுக்குச் சிறந்த அக வொழுக்கத்தினை விளக்குவதேயாம் என இறையனர் அகப்பொருளுரையால் விளங்கும்

குறிஞ்சியானது காதலர்கள் கூடுவது அந்த ஒழுக்கத்தின் சிறந்ததொரு நிலையினைக் கபிலர் இந்தப் பாட்டில் எடுத்து விளக்குகிறார் தலைவன் தலைவியைக் கள வொழுக்கத்தில் கூடுவதின் அருமையும், அவன் வரு வழியிலுள்ள இடர்ப்பாடுகளும் போன்ற இவை யெல்லாம் தலைவியின் உள்ளத்தைக் கலக்குகின்றன களவொழுக்கத்தினைப் பெற்றோர்க்குக் கூறி, மணத்திற்கு ஏற்பாடு செய்துகொள்ளலாமே என்ற கற்புநிறைந்த எண்ணம் தோன்றுவது இங்கு இயல்பு. அறத்தொடு நிற்றல் என்பது இதுதான் தோழியும் இதில் ஈடுபடுகின் றாள் தலைவியின் செவிலியே தோழியின் தாயாவாள் நடந்ததை அவளுக்குத் தோழி எடுத்துக் கூறுவதே இந்தப் பாட்டாகும்

களவொழுக்கம் என்றதும் செவிலி தவறாக எண்ணுதலும் கூடும் களவொழுக்கத்தினை எடுத்துக் கூறுவதும் எளிதன்று இந்த இக்கட்டுக்குள்ளே சிக்கித் தோழி பேசுகின்றாள் தலைவியின் வாட்டங்கண்டு அதனை நோய் என்று கருதிச் செவிலி வெறியாடுவித்தும், கழங்கு பிடித்தும் அந்த நோயினை அறிந்து தீர்க்க முயலுகின்றாள் அந்த முயற்சியை நினைப்பூட்டிக் கொண்டே தோழி பேசத்தொடங்கிறாள் அப்பொழுதன்றோ செவிலி நன்றகச் செவிசாய்த்துக் கேட்பாள்? கற்பின் உயர்வைப் புகழ்கின்றாள் தோழி அதுகெடின் மாற்-