பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

செந்தமிழ் பெட்டகம்

சாற்றின் தெளிவே தலைவன், தேனே தலைவிதி, மயிலே தலைவி, தேனை உண்ணுதலே களவொழுக்கம் “இவ்வாறு உள்ளுறை உவமமாகத் தம் குடிக்கு ஒரு குறைவும் தோன்றாத வகையில் தோழி கூறிவிடுகின்றாள் இந்தத் தலைவனின் குறிக்கோள் இழிந்த காமமன்று தன் வீட்டின் கதவினை அடையாது, திருவிழாக் காலத்தில் அனைவருக்கும் உணவிடுவது போல எப்போதும் உணவிட்டு, உயர்ந்ததோரோடு விருந்துண்டு, எஞ்சிய தனைத் தலைவியும் தலைவனும் உண்ண வேண்டுமென்பதே அவள் குறிக்கோள் இதனை அவனேகூறித் தலைவியைப் பிரியேன் என முருகன்மேல் ஆணையிட்டுத் தண்ணீரையும் குடித்துச் சூளுறவு செய்கிறான் என்று கூறித் தோழி முடிக்கின்றாள் மாலை வரும்வரை தலைவியோடு இருந்த தலைவன், “நுமர்தர நாடறி நன்மணம் செய்து கொள்வேன்” என்று கூறியதைத் தன்மகள் வாயாகக் கேட்ட செவிலி, தலைவன் தங்களை மறவாமைக்காக மகிழ்வாளன்றோ?

இவர்கள் கள வொழுக்கத்திற்கு ஏற்படுகின்ற இடர்ப்பாடுகளை எல்லாம் அடுக்கிக்கொண்டே போகின்றாள் தோழி, அப்பொழுதும் அன்பு குறையாது அவன் வந்துபோதலைக் குறிப்பிட்டு, அவன் வருகின்ற வழியிலே பாம்பும் புலியும் முதலையும் பேயும் சதுப்பு நிலமும் இருப்பதனை எண்ணித் தலைவி வருந்தி வாடுவதே தலையின் நோய்க்குக் காரணமென்று செவிலியின் ஐயத்தைப் போகுகின்றபோது, செவிலியின் மனமும் தலைவனுக்காகவும் பரிந்து உடன் வாடுமன்றோ? இந்த வகையில் நோக்கும் பொழுது களவொழும்மத்தின் உயரிய குறிக்கோளையும், அதற்குச் சுற்றுப்புறச் சூழலாக அமைந்த குறிஞ்சி நிலம், இரவு, கூதிர்க்காலம் என்ற இவற்றின் இயற்கை அழகினையும் எடுத்துக் கூறுவதோடு பிறர் மனத்தினை அறிந்து, அதற்கேற்பப் பேசும் கலை தலைசிறந்து விளங்குகின்ற நிலையில் இப்பாட்டு அமைந்திருக்கின்ற வியப்பினை நாம் பாராட்டாமல் இருப்பதற்கில்லை