பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

செந்தமிழ் பெட்டகம்

சாத்திரம் இது அரசியல் நூல், சமுதாய நூல், தண்ட நீதி, பொருட்பால் என்றெல்லாம் பெயர்பெறும் இரண்டு நிலையிலிருந்தும் நடத்தையினையே ஆராய்கின்றோம் இவ்வாறன்றி உள்ளிடான அன்பு அனுபவத்தினைக் காதலனும் காதலியுமாக ஒன்றி வாழும் இன்ப விளக்கத்தினை இந்த அற அடிப்படையிலே ஆராய்வது மூன்றாவது வகையாம் இவ்வாறு ஆராயும் நூலினைக் காம சாத்திரம் என்று வடநூலார் கூறுவர் இதனை அகம் எனலாம் தமிழர் அகம், புறம் என்று கொள்ளும் பாகுபாடு இந்த அடிப்படையில் எழுந்ததே ஆம்

இந்த முப்பாலையும் பலவகையாக ஆராயக்கூடும் ஒவ்வொரு நாட்டிலேயும் வழங்கும் அறவொழுக்கத் தினைக் கோவை செய்து வெளியிடும் சட்ட நூல்கள் ஒரு வகை இவை இருக்கும் நிலையை இருக்கிறபடியே கூறுவன. சுருதிகள் இவ்வாறு தாம் தோன்றிய காலத்தில் வழங்கிய வழக்கினை விளக்குவனவே அவ்வாறே பொருள் நூல் அல்லது அருத்த சாத்திரத்தில் சிலவும் அவ்வப்போது இருக்கும் அரசியல் அமைப்பு, கோட்டை அமைப்பு, வரித்திட்டம் முதலியவற்றைக் கூறுவது உண்டு காமசாத்திரத்திற் சிலவும் இப்படியே ஆணும் பெண்ணும் கொள்ளும் காமம் எந்த எந்த வகையாலெல்லாம் வெளிப்படுகிறது என்பதனையும், பரத்தையர் கூட்டம், பிறர் மனைவியரோடு கூடுதல், முதியோர் கூட்டம், இளைஞர் கூட்டம், விலங்கின் கூட்டம் என்ற பலவகையினையும், அவற்றிற்கென மக்கள் கொள்ளும் வழி வகையினையும் கூறுதல் உண்டு இவையெல்லாம் இருப்பதனை ஆராயும் விஞ்ஞான முறையில் செல்வனவாம்

இவ்வாறன்றி, எவ்வாறு இருக்கவேண்டும் என்று ஆராயத் தொடங்கிக் குறிக்கோளை விளக்குவது மக்கள் உயர்வதற்கு வழிகாட்டும் முறையாம் நீதிநூல் என்பவை இத்தகையனவே திருக்குறள் இந்த வகையில் சேர்ந்த நூல் “அறத்திற் சிறந்தது எது? சமுதாய அமைப்பிற் சிறந்தது எது? இன்பத்தில் சிறந்தது எது?’ என்று ஆராயவே