பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

213

கூறுகிறார் துறவு என்பது “பிறப்பறுக்க நோற்பாக்கு உடம்பும் மிகை” என்ற அளவு சென்றாலும், மனைவி முதலியோரைத் துறத்தல் என்ற பொருளில் அன்றி, “யான், எனது” என்ற உணர்ச்சியையே துறத்தல் என்ற பொருளில் இங்கு வழங்கக் காண்கிறோம் யான் எனதென்னும் செருக்கறுப்பானே துறவி "யான் பிறர்” என்றும், மக்கள், ஊர், நாடு, அரசு, மொழி, சமயம், பொருள் முதலியவற்றை “எனது, பிறரது” என்றும் வளரும் உணர்ச்சியுடைய பெரும்பான்மையோர் வாழ்க்கைப் போக்கே வரையறைபட்டது’ என்ற பொருளில் அறமெனப் பேசப்பெறும் இல்லறமாம்

இத்தகைய வரையறையின்றி அனைத்தினையும் ஒரு குடும்பமாகவே ஏன், தானேயாகவே-கொண்டு, பிறிதின் நோய் தன் நோய்போல் போற்றி வாழ்தலே துறவறமாம் நம்மவர் எனத் தொடர்பு கொண்டு, அத்தொடர்பினைச் சுற்றி வளரும் அறமே அன்பினை அடிப்படையாகக் கொண்ட இல்லறம் இத்தகைய தொடர்பு ஒன்றும் நோக்காது மன்னுயிரை எல்லாம் தன்னுயிர் போல் எண்ணி நெகிழ்ந்துருகி வாழ்வது அருளில் வளரும் துறவறம் புத்தர் பெருமான், இயேசுநாதர், இராம கிருஷ்ணர், இராமலிங்கர் முதலியோர் இவ்வாறு இயற்கையிலேயே துறவுணர்வாம் அருளுள்ளத்தோடு பிறந்தோர்கள்

இயல்பாகவே இவ்வாறு உலகமாக மலர்ந்துள்ளவர்கள் நீங்கலாக, மற்றவர்கள் படிப்படியாகவே இந்த உயர் நிலையை அடைதல் கூடும் வரையறை பெற்ற இல்லற நிலையில் இருந்து, அன்பு வளர்ந்தபின், அந்த அன்பு அருளாக மலருகிற நுட்பத்தை வள்ளுவர் கூறுகிறார் “அருள் என்னும் அன்பீன் குழவி" என்பது வள்ளுவர் கண்ட உண்மை மனிதன், தன்னைப் பிறரினும் வேறென முதலில் காண்பதிலை பின்னர் உலகில் பழகி வரும்போது தன்னை வேறு பிரித்து நோக்க வேண்டியதாகின்றது தன்னலப்பேய் அவனைப் பிடித்து விடுகிறது இந்தப் பேயை ஓட்ட முன்னிருந்த ஒற்றுமை