பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

215

தீமைகளே நஞ்சாக்குவன இந்தத் தலைப்புக்கள் எதிர் மறை நிலையைச் சுட்டுவனபோலத் தோன்றினா லும, இவை எல்லாம் உடன்பாட்டு நிலையாம்; அன்பின் விளக்கமே ஆம் விளக்கம் என்றால் இருள் ஒழிதலும் உண்டன்றோ? ஆகையால், அன்பு என்பது பலவகைக் கோணங்களில் தோன்றும் காட்சியையே இவ்வாறெல்லாம் நாம் காண்கிறோம் இவ்வாறு பழகியவன் எங்கும் நண்பென்னும் நாடாச் சிறப்புப் பெற்றுச் சட்டத்திற்கஞ்சாமல் அன்பு ஒன்றினாலேயே பாத்தூண் வாழ்க்கை வாழ்கிறான் இதுவே தலைசிறந்த பொதுமை அறம்

பாத்துண் என்பது வள்ளுவர் கண்ட பொருள் நிறைந்த அழயெ சொற்றொடர் பாத்தூண் வாழ்க்கையின் பெருவிளக்கமே ஒப்புரவு கைம்மாறு வேண்டாது பொழியும் மழைபோல இவனும் இன்னார் இனியார் என்னது எல்லோர்க்கும் உதவுகின்றான் 'தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்’ என்று சங்க நூல்கள் பேசும் நிலை இதுவே ஆம் இங்கே உலகம் முழுவதும் நம்மோடு தொடர்புடையது என்பதும், உலகமின்றி நாம் வாழ முடியாது என்பதும் தோன்றும் “காக்கை, குருவி எங்கள் சாதி” என்று பாரதியார் பாடுவது தமிழன் கண்ட உண்மை

எனவே, ஈதலும் வள்ளுவர்க்குப் பாத்தூண் வாழ்க்கையே ஆகிறது ஈத்துவக்கும் இன்பம் அப்போது விளங்குகிறது “ஈதல் இயையாக் கடை சாதலே நல்லது” என்ற உணர்ச்சியாக அங்கு அன்பு பழுக்கிறது இறப்பதா முடிவு? இல்லை இறப்பார் யார்? மண்ணோடு மண்ணாய்ப் போவாரே ஆவர் நிலையாமையே தன் புகழாகக் கொண்ட உலகில், மண்ணோடு மண்ணாக மண்ணான உடம்பை வீசி எறிந்தும் தம் செயலால் உலகினை வாழச் செய்து, என்றென்றும் பேர் பெற்று வாழ்வாரே சாவையும் வென்று புகழுடம்போடு என்றென்றும் சாவாது வாழ்பவர் ஆவர் ஈது ஓர் அரிய வித்தை, “நத்தம் போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க்கல்லால் அரிது”