பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

செந்தமிழ் பெட்டகம்

இதனையே புகழ் என்று வள்ளுவர் இல்லறத்தின் பயனாகப் பாடி முடிக்கின்றார்

இவ்வாறு உலகமாக அன்பு மலருமானால் அதற்கே அருள் என்று பெயர் இந்த அருளே துறவின் அடிப்படை ஆதலின், அருளை விளக்கி துறவற இயலைத் தொடங்குகின்றார் வள்ளுவர் மன்னுயிர் ஓம்பினான் தன்னுயிர்க்கு அஞ்சவேண்டாம் எவ்வாறு இதனை வளர்ப்பது? வாழ்க்கையில் பேருண்மைகள் செயற்படற்கு வேண்டிய சிறு குறிப்பும் தருகின்றவர் வள்ளுவர் குறிக் கோளுலகில் உயரப் பறந்தாலும், மண்மேல் கால்வைத்து நடந்தே பின் உயர இவர் வழி காட்டுகிறார் “வலியார் முன் தன்னை நினைக்க, தான் தன்னின் மெலியார் மேல் செல்லுமிடத்து” இங்கே உலகமாய்ப் பரந்த அருள் பிறி தொன்றற்குத் தீமை செய்ய அஞ்சும் புலாலுண்ணாமை அங்கு இயல்பாகிறது “தன்னுான் பெருக்கற்குத் தான் பிறிதூன் உண்பான் எங்கனம் ஆளும் அருள்”

துறவு வழியில் தவம் பெரிது ஆனால், தவம் என்பதும் அருளின் விளக்கமே “உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு” கூடா ஒழுக்கம் இங்கு உலகினை வஞ்சிப்பதே ஆம் கள்ளாமை, பொய்யாமை, சினவாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை முதலியன இங்கே சிறப்பாகப் பாதுகாக்க வேண்டியவை வாய்மை என்பதற்கத் திருக்குறள் புதிய இலக்கணம் தருகின்றது யாதொன்றும் தீமை இலாத சொல்லே வாய்மை ஏன் சினம் வேண்டா? நகையையும் உலகையையும் அது கொல்லும் மன்னு யிரைத் தன்னுயிராக நினைத்தால் இன்னா செய்வது எது? “தன்னுயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல்” இன்னா செய்யாமையே பழி தீர்ப்பதுமாகும்

“இன்னா செய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்” கொல்லாமை என்பது அஹிம்சையாம் எதிர் மறை வாய்பாட்டால் இவ்வாறு கூறினாலும் இது ஓர் உடன்பாட்டு நிலையே ஆம்