உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

செந்தமிழ் பெட்டகம்

கைக்குவந்த சீட்டுக்கு ஏற்ப அன்றோ ஆடுதல் வேண்டும்? வந்த சீட்டுப்போன்றது ஊழ்நிலை

திருக்குறளின் இரண்டாவது பிரிவு பொருட்பாலாகும் இந்திய நாடு முழுவதிலும் அருத்த சாத்திரம் எல்லார்க்கும் ஒத்த ஓர் அடிப்படை கொண்டு விளங்கியது படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆறும் உடையானே அரசன் குறளில் பொருட்பாலைப் பிரிப்பவர்கள் பல பல வகையாகப் பிரித்தாலும் திருவள்ளுவர் கொண்ட இந்த அடிப்படையில் பிரிப்பவர் பக்கமே வலியுடைத்தாகும் குடி என்பது குடிமக்கள், அவர்களைப் பற்றியே முடிந்த முடிபாக இந்தப் பொருட்பாலின் கடைசி 13 அதிகாரங்கள் பேசுகின்றன. அவர்கள் சமுதாயத்துக்குச் சுமையாகாமல் தாமே உழைத்து உண்பாராயபோது பிறருக்கும் பயன்பட வரும் அவர்தம் உழவே சிறந்து இனிக்கிறது வாணிகத்தினைவிட உழவின் சிறப்பே இங்குக் கேட்கிறது

சமுதாயக் குடிமக்கள் அதன் தேவைகளை நிரப்பிடும் குறிக்கோள் தோன்றுகிறது. பொருள் இல்லார் இல்லாத சமுதாயமே வேண்டும் இரப்பாரையும் ஓர் அமைப்பாகக் கொண்டு சமுதாயத்தை அமைப்பது கொடுமையே ஆம் "இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்” பாரதி,"தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று பாடியதற்கு வித்து அதுவே ஆதலின் வறுமை ஒழிவதே நாட்டின் குறிக்கோள் இரவச்சம் பெரிது. ஆனாலும், இரவாதார் இல்லாது ஒருநாளில் மறைந்து போவாரோ? இரத்தலும் இன்றியமையாது வேண்டப்படும்போது என் செய்வது? கரவாது ஈவார் முன் இரப்பதும் ஈதலே போல இன்பந்தரும் இத்தகைய இரவு ஒருவகையால் மனிதப் பண்பாட்டைச் சாணை பிடித்துப் பளபளக்கச் செய்கிறது “இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்று வந்தற்று” மக்கட் பண்பாடு இல்லாதவர் மக்களே