பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

221

படையே இல்லாத அன்பரசியலும் அறிவரசியலு மாகச் சமுதாயம் அமையவேண்டு மாயினும் படையினை அறவே மறக்கமுடியாது படை என்பது தன்னையும் அழிய மாறி உதவும் தியாக வீரத்தின் விளக்கமே ஆம் படை நடத்தத் தலைமக்களும் வேண்டும் “மறம், மானம், மாண்ட வழிச்செலவு, தேற்றம்” இவை உடையது படை “சிறுமையும் துனியும் வறுமையும் இல்லது படை” எனச் செயல்முறை துட்பமும் கூறுகிறார் வள்ளுவர் படை என்பதன் பெருமை தியாகத்தில் பழுத்த படையாளர் செருக்கே ஆகும் பேராண்மை எல்லாம் ஊராண்மையாக முடிகின்ற சிறந்த வீரத் தியாகத்தில், சாவும் இரந்துகொள்ளத்தக்கதாகிறது

பகை இருப்பதால் வேண்டுவது படை பகையாகி வளர்வன பலபல துன்பங்கள் பகைக்கு எதிர்மறை நட்பு உலகம் பலபல நாடுகளாகப் பிரிந்து விளங்குகிறது அகநிலை அரசியல் ஆராய்ச்சி ஒருபுறம் இருக்கப் புறநிலை அரசியல் ஆராய்ச்சி வெளிநாட்டுக் கொள்கையாக முடிகிறது நட்புடன் வாழும் உலகமே எல்லோரும் இங்கு விரும்புவது நட்பும் பழைய உறவும் இங்கு வளரத்தக்கன அரசியல் நட்பு என்று வெளிநாட்டுக் கொள்கையைக் கூறினாலும் எல்லாத் துறையிலும் விளங்குகிற நட்பு என்ற அடிப்படை உண்மையை வள்ளுவர் ஆராய்வதால் தனிப்பட்டவர்களின் வாழ்க் கையிலும் அந்த நட்பின் விளக்கம் தோன்றுவது தெளிவாகிறது

பிசிராந்தையார், கோப்பெருஞ் சோழர் முதலியோர் வாழ்வின் நுட்பமும் இவ்வாறு விளங்குவதாக உரையாசிரியர்கள் காட்டுகின்றார்கள். இந்த அடிப்படை ஆராய்ச்சியின் பயனாகவே பொருட்பால் அரசியலுக்கே அன்றிக் குடிமக்கள் தனிவாழ்விற்கும் உதவுவதாக முடிந்து முடியரசு நூலாகிறது; நட்பென்றால் தீ நட்பும் உண்டு; மெய்ந் நட்பும் உண்டு பொய்ந் நட்பும் உண்டு நட்பின் எதிர்மறையாகப் பகையும்