பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

செந்தமிழ் பெட்டகம்

நீங்கி இனிக்கும் இன்பமாக வள்ளுவர் முடிப்பது காணலாம்

அரசியலில், அமைச்சர் முதலான அலுவலாளரைத் தேர்ந்தெடுப்பது ஒரு பெருஞ் சிக்கல் இங்கும் எல்லா அலுவலாளர்க்கும் பொதுவான நிலையே கூறுகிறார் வள்ளுவர் தெரிந்து தேர்ந்தெடுத்தல் வேண்டும் இதுவே தெரிந்து தெளிதல் எனப் பெறும் இந்திய நாடு கண்ட உண்மையை வள்ளுவரும் இங்கே உடன் படுகிறார் “அறம், பொருள், இன்பம், உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப்படும்” பின் தெரிந்து வினையாட வேண்டும் “இதனை இதனாலிவன்முடிக்கு மென் றாய்ந்து அதனை அவன்கண் விடல்”. நாடோறும் மன்னன் நாடுதல் வேண்டும் ஒருவரிடமும் கோடாமை உண்டானால், அலுவலாளராகத் தெரிந்தெடுப்பாரிடம் வல்லமையும் கண்டுளதானால், சுற்றந்தழுவுதலும் அரசியலுக்கு அரண் செய்வதாம்

கடமையே அரசனின் முதற் பொறுப்பு என்றும் விழிப்பாக இருத்தல் வேண்டும் பொச்சாவாமை இன்றியமையாததாம் இதன் விளக்கமே செங்கோல் ஒற்றர்கள் இங்கே கண்ணாக அமைகின்றனர். ஆனால் ஒற்றர்களை அறிய ஒற்றர்களும் வேண்டும் இல்லையேல் தீமை பெரிதாம் எண்ணியும் அறிந்தும் வருவன எல்லாம் முடிவில் செயற்படவே அன்றோ? கீரை ஆய்ந்து கொண்டே இருந்தால் உண்பது என்று? ஆதலின் செயற் பாட்டின் சிறப்பினைப் பேசுவா ராய், ஊக்கமுடைமை, மடியின்மை, விடாமுயற்சியாம் ஆள்வினை உடைமை, இடுக்கணழியாமை என்பன வற்றை வள்ளுவர் வற்பு றுத்துகிறார் “இடுக்கண் வருங்கால் நகுக”, “ஊழையும் உப்பக்கங் காண்பர்”, “முயற்சி திருவினை ஆக்கும்”, “நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக்கலன்”, “உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்” என்பவை பழமொழிகளாய் விட்டன