பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

செந்தமிழ் பெட்டகம்

இங்கே வினைத்துய்மை என ஒன்றும் கூறுகிறார் வள்ளுவர் “முடிவு நல்லதாய் இருந்தால் போதாது முடிவினை அடையும் வழியும் தூயதாதல் வேண்டும்” "ஈன்றாள் பசி காண்பாளாயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை” இதனை எல்லாப் பொருள் நூலாரும் ஒப்புவதில்லை அறத்தினையே வற்புறுத்தும் கூட்டத்தைச் சேர்ந்தவர் வள்ளுவர் ஆதலின், பிற பொருள் நூலோர் செல்லும் தேய்ந்த வழியில் இவர் செல்லவில்லை எனலாம் பொருட்பாலில் இவர் செல்வது பிறர் செல்லாத வழியும் அன்று ஆனால், பிறர் எல்லாம் பொருள் நூலாரும் ஒப்புவதில்லை

அறத்தினையே வற்புறுத்தும் கூட்டத்தைச் சேர்ந்தவர் வள்ளுவர் ஆதலின், பிற பொருள்நூலோர் செல்லும் தேய்ந்த வழியில் இவர் செல்லவில்லை எனலாம் பொருட்பாலில் இவர் செல்வது பிறர் செல் லாத வழியும் அன்று ஆனால், பிறர் எல்லாம் பொருள் வாழ்வின் அடிப்படையாகக் கொள்ளாத ஔவற்றை இங்கே நுழைத்துக் கடைகாலாய் அமைக்கின்றார் இவர் அரசியலின் முடிமணியாகவும் அமைக்கின்றார் அன்பு, குடி, தூய்மை, அறம், நாகரிகம், குடும்பம், என்பன இவர் இங்கே நுழைத்தன எனலாம்

திருக்குறளில் மூன்றாவது பால் காமத்துப்பால், ஒருவனும் ஒருத்தியும் இறைவழியேயும் இயற்கை வழியேயும் நின்று, முனைப்படங்கி, அன்பால் ஒருவராய்க் கணவனும் மன்ைவியுமாக வாழ்கிற இன்ப வாழ்வினை இங்கே கூறுகிறர் வள்ளுவர் குடும்பமே அடிப்படை என்று கண்டோம் அதன் அடிப்படையே அன்பு அன்பால் இருவர் ஒன்றாகும் காட்சியே இன்பக் காட்சி இதன் நுட்புத்தினை நக்கீரர் உரை என வழங்கும் இறையனார் அகப்பொருளுரையில் முற்பகுதியில் காண்கிறோம் அந்தக் கண்கொண்டு கண்டால்தான் பரிபாடல் கூறுவதுபோல் இந்தக் காதல் கடவுட் காதலாக விளங்குகிற நயத்தை உணர முடியும்