பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

227


இருவர் கூடுதல் குறிஞ்சி, மணம் முடியுமுன் இடையறவு படும்போது “கற்பிழந்தபின் உயிர் வாழ்வதோ?” எனக் கலங்கிக் கடவுளன்பு வாழ்வு வாழ்ந்து, உலகினை வாழ்வியாமைக்கு இரங்கி உள்ள முடைந்து புலம்புதலே நெய்தல் பிரிவே பாலை, பிரிந்த போதும் ஒருவர் உட்கோளை ஒருவர் உட்கொண்டு இருத்தலே முல்லை இருவரான இருமையானது ஒருமை அன்பாகப் படிப்படியாகப் பொருத்த முற்றுத் திருத்தம் பெறுகின்ற ஊடாட்டமே மருதம்; இந்த ஐந்திணையையும் ஒவ்வொன்றற்கு ஒரைந்து அதிகாரமாக 25 அதிகாரமாகக் காமத்துப் பாலில் வள்ளுவர் கூறுகிறார் என்பது ஒரு கொள்கை களவும் கற்பும் என இரண்டு பகுதிகளாகக் கூறுகிறார் என்பது மற்றொரு கொள்கை ஆண் கூற்று, பெண் கூற்று, இருவர் கூற்று எனக் கூறுகின்றார் என்பது மூன்றாம் கொள்கை

இப்பாலினைக் காதல் காப்பியமாக்கிக் காதலர் கூற்றாக அமையும் நாடகநிலையில் வள்ளுவர் அமைத்துள்ளார் சங்கநூலில் வரும் அகப் பாட்டுக்களும் இவ்வாறு அமைந்தவையே ஆம் ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு சிறுகதையாய் விரிவதாம் அன்பே சிவமாம் என்ற உண்மையை விளக்குவதுபோல முறுகிவளரும் அன்பின் உயர்வை இங்கே காணலாம்

அறியாது கூடுதல், பிரிந்து கூடுதல், ஊடிக் கூடுதல் என வருதல் கொண்டே இக்காமத்துப் பாலுக்கும் வாத்சாயனர் காம சாத்திரத்துக்கும் ஒற்றுமை காண்போரும் உளர் வாத்சாயனர் உலகில் உள்ளதனைத் தீமை நன்மை என்ற பாகுபாடு இன்றி விளக்குகின்றார் வள்ளுவரோ என்றும் இனியது நல்லது என நாட்டப் பட்டதாகிய இன்ப வாழ்வினைக் குறிக்கோள் வாழ் வாகக் கூறுகின்றார் இதன் பயனாகப் பண்டை இலக்கியங்களில் வரும் பரத்தையர் பிரிவையும் நேராக எடுத்து மொழியாமல் மருதத்தை ஈருள்ளமும் ஒருள்ள மாகும் அரியதோர் ஊடாட்டமாகக் கண்டு, புலவி-