பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

21

அரசில் இடம்பெற்ற மந்திரி சம்மதித்து இலட்ச ரூபாய் மானியம் அளித்தார் முதலில் சங்கங்கள் இருந்த தொல்பதியாகிய மதுரையில் 1913-இல் வேலை தொடங்கியது பின்னர்ச் சில வசதிகளை முன்னிட்டு 1915 முதல் அவ் வேலை சென்னையில் நடைபெறலாயிற்று சாண்ட்லர் பாதிரியார் தமிழ் லெக்சிக்கனுக்குப் பதிப்பாசிரியராக இருந்தார் இவ்விதமாகச் செய்வ தென்று திட்டமிட்டுச் சொற்கள் சேகரித்தார், 1916 இறுதிக்குள் ஏறக்குறைய 80 ஆயிரம் சொற்கள் சேகரிக்கப்பெற்றன

1918ஆம் ஆண்டில் தமிழ் லெக்சிக்கன் தயாரிக்கும் பொறுப்பு முழுவதும் சென்னைப் பல்கலைக்கழகத்திடம் ஒப்புவிக்கப்பட்டது லெக்சிக்கன் பதிப்புரிமையும் பல்கலைக்கழகத்துக்கே தரப்பட்டது

1919-இல் சாண்ட்லர் விலகவே, எஸ் அனவரதவிநாயகம் பிள்ளை தமிழ் லெக்சிக்கனுக்குப் பதிப்பாசிரியரானார்; 1924 முதல் 1926 வரை சீ. பி வெங்கட்டராமய்யர் பதிப்பாசிரியராக இருந்தார் 1926ஆம் ஆண்டு முதல் லெக்சிக்கன் வேலை முடியும் வரை எஸ் வையாபுரிப் பிள்ளை பதிப்பாசிரியராக இருந்தார்

தமிழ் லெக்சிக்கன் ஆறு தொகுதிகளாக வெளியிடப்பட்டன முதல் தொகுதி வெளியிடத் தொடங்கிய காலம் 8-10-1924 ஆறாம் தொகுதி முடிந்து வெளியிடப்பட்ட காலம் 20-3-1936 ஆறு தொகுதிகளிலுமுள்ள சொற்களின் தொகை 1,044,05

1938-1939-இல் லெக்சிக்கனுக்கு அனுபந்தத்தொகுதி வெளியிடப்பட்டது அதில் உள்ள சொற்களின் தொகை 13,357

நிகண்டு:

நிகண்டு என்பது இலக்கணம் போன்றதொரு கருவிநூல் நிகண்டு என்னும் சொல்லுக்குக் கூட்டம்