பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

செந்தமிழ் பெட்டகம்


வள்ளுவச் சாதியினைப் பற்றிப் ‘பறையருள் குரு வாகவும் அரசரின் ஆணையைத் தெரிவிப்போராக வும் உள்ள ஒரு சாதி' எனத் தமிழகராதி கூறும் நிமித்தம் பார்த்துச் சோதிடம் கூறும் நிமித்திகனை வள்ளுவன் என்ற சொல் சீவக சிந்தாமணியில் சுட்டுகிறது (419) இன்றும் இச்சாதியினர் சோதிடம் கூறக் காண்கிறோம் ஞான வெட்டியான் என்ற நூலும் இந்தக் குலத்தைச் சேர்ந்த வள்ளுவர் எழுதியதாகத் தன்னைக் கூறிக் கொள்கிறது திருக்குறளைப் படிக்கின்ற சாதிச் செருக்குடையவர்களுக்கு அதன் பொது அறம் இத்தகைய கதைகளைக் கற்பித்துக் காணத் துண்டியது போலும்

அரசர்க்கு உள்படு கருமத் தலைவர் வள்ளுவர் என்று பிங்கலந்தை கூறும் அரசன் ஆணையை யானைமேல் வைத்து முரசறைந்து தெரிவிக்கும் அரசியல் வெளிகட்டுத் தலைவர்களுக்கும் வள்ளுவர் என்ற பெயர் உண்டு என்பது மணிமேகலை முதலியவற்றால் நாம் அறியலாம் அரசியல் நுட்பங்களை எல்லாம் கூறும் திருக்குறள் அத்தகையோர் அதிகாரியால் எழுதப் பட்டிருக்கலாம் என்று கருதுவது இயல்பேயாம், வல்லபர் என்ற வடமொழிச் சொல் வள்ளுவர் என்று திரிந்தது எனக் கூறுவாரும் உண்டு திருக்குறள் செய்த ஆசிரியர் அவர் என்பதற்கு மேல் வள்ளுவர் என்ற வழக்கால் நாம் வரையறுத்துக் கூறுவதற்கு ஒரு கருவியும் இல்லை

ஏலேலசிங்கர் என்பவருடைய கப்பல்கள் கரை தட்டிப் போனபோது வள்ளுவர் தம் ஆற்றலால் அவற்றைக் கரை சேர்ப்பித்தார் என்று ஒரு கதையும் உண்டு. ஏலேலசிங்கர் என்ற தமிழ் அரசர் சிங்களத்தை கி.மு இரண்டாம் நூற்றாண்டில் ஆண்டதனை நாம் அறி வோம் இனி ஏலாசாரியர் என்பது வந்தவாசிக்கு அடுத்த மலையில் கிமு முதல் நூற்றாண்டில் தவம் செய்துவந்த குத்தகுந்தாசாரியரின் பெயர் என்று சைனர் கூறுவர் இவர்தாம் திருக்குற்ளைச் செய்தார் என்றும், இவருடைய