பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

231

மாணவராய் இல்லறத்தில் வாழ்ந்த வள்ளுவர் இதனை உலகிற்கு அறிவித்தனர் என்றும் திரு சக்கரவர்த்தி நயினார் கூறுவர் இங்கும் உறுதி கூறுவதற்கு ஏற்ற பிற செய்திகள் நமக்குக் கிட்டுமாறு இல்லை

இவருடைய மனைவியின் பெயர் வாசுகி என்றும், இவர் ஒரு நெசவுத் தொழிலாளி என்றும்கூறும் பல கதைகளும் உள

இவர் சென்னையைச் சார்ந்த மயிலையில் வாழ்ந்தார் என்பது பழைய வழக்கு. வடமதுரைக்குக் கண்ணன் போலத் தென்மதுரைக்கத் திருவள்ளுவர் எனத் திருவள்ளுவமாலை பாடுகிறது தமிழ் வளர்ந்த மதுரைக்குப் பெருமை தமிழ் வளர்த்த இவரால் வந்ததோடு மதுரையிலும் இவர் வாழ்ந்தனர் என்றும் கூறுவர் மயிலையில் வாழும்போது கிறிஸ்துவின் அடியாராகிய தோமய்யர் கிறிஸ்துவின் மலைச் சொற்பொழிவினை விளக்கியதனை வள்ளுவர் கேட்டிருக்கலாமென்று போப்பையர் கருதுகிறார்

வள்ளுவருடைய கொள்கை யாதென்பதனை முன்னதே விளக்கியுள்ளோம் இவரைச் சமணர் என்று வற்புறுத்துவாரும் உண்டு அம்மதத்தின் அடிப்படைக் கொள்கையாம் அஹிம்சை இங்கு விளங்குவது உண்மை ஆனால் எல்லோர்க்கும் ஒப்ப முடிந்த கொள்கைகளையே வற்புறுத்திப் பரப்ப வேண்டும் என்றெழுந்த தம் முயற்சியில் தாம் இன்ன மதத்தனர் என்பதைத் தெள்ளத் தெளிய வள்ளுவர் கூறாது செல்வதால் அவர் விரும்பாத ஒரு பட்டத்தை அவருக்குச் சூட்டுவதில் பயனில்லை தேவர் என்றும் நாயனார் என்றும் திருவள்ளுவரை வழங்குவதாலேயே அவரைச் சமணம் என்பதற்கில்லை. அப்பெயர்கள் சமணரல்லாதர்க்கும் வழங்கக் காண்கிறோம்.

நீலகேசியின் உரையாசிரியர் பதினாலாம் நூற்றாண்டில் திருக்குறளை 'எமது ஞத்து’ என்கிறார்.