பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

233

-பவர்” என்பது குறள் “முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்” என்பது நற்றிணை “ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்” என்பது குறள் ‘ஈன்றஞான்றினும் பெரிதுவக்கும்” என்பது குறள். “ஈன்றஞான்றினும் பெரிதுவந்தனளே” என்பர் நச் செள்ளையார் சங்கப்புலவர்கள் திருக்குறளை எடுத்தாள் கின்றார்களா? திருவள்ளுவர் சங்கக் கருத்துக்களை எடுத்தாள்கிறார்களா? என்று எவ்வாறு கூறுவது?"அறம் பாடிற்றே” என்று கூறும் புறநானூறு அறம் என்பதால் வள்ளுவரின் திருக்குறளையே குறிக்கின்றது என்பாரும் உண்டு திருவள்ளுவமாலை சங்கப்புலவர் ஒருங்கிருந்து பாடியது என்று இன்று நம்புவாரில்லை

தொல்காப்பியத்திற் காணாத வழக்குக்கள் பாட்டிலும் தொகையிலும் அருகி வருபவையாய்த் திருக்குறளில் பயின்ற வருதலால் திருக்குறள் சங்க நூல்களுக்குப் பின்னையது என்று கூறுவாரும் உளர் ஆல், இல் என்ற உருபுகளும், இன் என்பதன் பின்வரும் இல் என்ற உருபும், பொருட்டு, மாட்டு, வேண்டி முதலிய சொல்லுருபுகளும், உயர்திணையில் வரும் கள் விகுதியும், ஒருமையான துவவீற்றின் முன் வரும் எல்லாமும் என்பதும், உயர் திணைப் படர்க்கையில் வரும் எல்லாமும் என்பதும், மரியாதை ஒருமையாக வரும் நீர் என்பதும், வினையடிச் சொற்களின் பின்வரும் உகரச்சாரியையும், துணை வினையாக வரும்வடு முதலியனவும், ஈரேவலாக வரும் வி, பி என்பனவும், தன்மை ஒருமையில் வரும் அன் ஈறும், எதிர்மறை இடைநிலையாக வரும் இல் என்பதும், தன்மையிலேயும் முன்னிலையிலேயும் வரும் வியங்கோளும், செயப்பாட்டு வினையை அமைக்க வரும் படு என்பதும், செயின் என்னும் வினையெச்சப் பொருள் தர வரும், கால், ஆல், ஏல், இல், ஆனும், ஏனும் போன்ற விகுதிகளும், செயற்கென் என்ற வினையெச்சத்தின் பொருளில் வரும் செய என்னும் எச்சமும், எதிர்கால வினையெச்ச ஈறாக வரும் பாக்கு என்பதும், வேண்டாம்