பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

செந்தமிழ் பெட்டகம்

எனப் பிற்காலத்தே மருவிய வேண்டாவாம் என்ற வடிவமும், நன்னூலார் அறிந்த எங்ஙனம் என்ற வடிவமும், போதர என்பதிலிருந்து அமைத்துக் கொண்டது போல் தோன்றும் போதாய் என்ற வடிவமும் குறளில் பயின்று வருகின்றமையால் சங்க காலத்திற்குக் குறள் பின்னையது என்பர்

ஒருவந்தம் போன்ற அரிசமாசமும் (வடமொழியும் தமிழும் கலந்ததொகைச் சொல்) சங்ககால அகவல் ஒசையிலும் வேறான செப்பல் ஓசை வரும் பெண்பா யாப்புப் பயின்று வருவது பிற்கால வழக்கு என்பர் இவை எல்லாம் திருவள்ளுவர் புதியனவாகப் புகுத்தியன ஆகா பேச்சு வழக்கிலோ திசைமொழி வழக்கிலோ பயின்று வழங்குவன நாளடைவில் இலக்கிய வழக்கிலும் புகுவதே இயல்பு, இவை அனைத்தும் சங்ககாலம் அறியாதனவும் அல்ல, திருவள்ளுவர் எல்லார்க்கும் பொதுவானதொரு நூலை எழுத வந்ததன் காரணமாகப் பேச்சு வழக்கில் உள்ளவற்றையும் தடையின்றித் தம் நூலில் ஆண்டார் என்று கொள்வதில் வியப்பொன்றும் இல்லை: வட மொழிச் சொற்கள் வருவதும் இந்த நோக்கத்தின் பயனே ஆம் எப்படிக் கணக்குப் பார்த்தாலும் நூற்றுக்கு இரண்டுக்குமேல் குறளில் வடமொழிச் சொற்கள் இருப்பதாகக் காணோம் பழைய சொல் வழக்காறும் அங்குக் காண்கிறோம்

ஆய்தம், ஆன், வயின், மிசை, கண், உழி என்ற உருபுகளைப் பெறுகுவம், செய்யன்மின், செய்யற்க, வாழிய, வாழி, படாஅதி, அயர்கம், வாழ்வர், செய்கலான், அவலமிலர், உளரல்லர், பெறுதி, இழத்தும், உரைக்கோ, உவ், யான், யர்ம், சொல்லிசை அளபெடை, அன்சாரியை பெற்ற இறந்த காலம், அஃறிணை ஒருமை வினைகள், முதலிய வடிவங்கள் எதிர்மறை வியங்கோளாக வரும் அல்ஈறு, அல்ஈற்று வியங்கோள் முதலியன வருதலும், உன், உம் முதலிய முன்னிலைச் சொற்கள் வழங்காமையும் குறளின் பழைமையைக் காட்டும் என்பர்